பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் குளிக்க சென்ற போது ஏற்பட்ட பிரச்னையில், 1980ல் துப்பாக்கிச்சூடு நடந்ததில் பலர் இறந்தனர்.
இதையொட்டி ஹைந்தவ சேவா சங்கம் பத்து நாட்களும், தேவசம்போர்டு இடத்தில் பந்தல் அமைத்து சமய மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சி, 85 ஆண்டுகளாக நடந்து வரும் சூழலில், இந்த நிகழ்ச்சியை இந்தாண்டு தேவசம்போர்டு தடை செய்ததோடு, அறநிலையத்துறை நேரடியாக இதனை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மண்டைக்காட்டை மீண்டும் கலவர பூமியாக மாற்றி விடக்கூடாது என, ஹிந்து தர்ம வித்யா பீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி தெரிவித்தார்.
இதை தி.மு.க. மாவட்ட செயலர், மேயர் மகேஷ் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மண்டைக்காடு வந்தார்.

உடன்பாடு
மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த பின், நாகர்கோவில் விருந்தினர் மாளிகையில் சமரச பேச்சு தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஐந்து மணி நேர பேச்சு, தனித்தனி ஆலோசனைக்கு பின்னர் ஹைந்தவ சேவா சங்கமும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து சமய மாநாட்டை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''ஏற்கனவே தயாரித்த நிகழ்ச்சி நிரலில் சிறுசிறு மாற்றங்களுடன் சமய மாநாடு நடைபெறும்,'' என்றார்.
இதே கருத்தை அமைச்சர் சேகர்பாபுவும் உறுதி செய்தார். இதனால் சில நாட்களாக நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. மார்ச், 5ல் துவங்கும் திருவிழா, 10 நாட்கள் நடக்கிறது.
வாசகர் கருத்து (15)
ஒட்டகம் மெல்ல கூடாரத்தில் நுழைவது போல் இந்த கேடுகெட்ட இந்துவிரோத அரசு உள்ளே நுழைகிறது.
இது பகவதி அம்மனுக்கு தெரியுமோ ?
இதாலே என்னாகும்?
இந்திய கிரிக்கெட் நமது அரசாங்கம் கவனிக்கிறது தவிர கட்டுப்படுத்தவில்லை .. அதுபோல .. ஹிந்து கோவில்களை தனிநபர் சங்கம் கட்டுப்படுத்தலாம் என்று தான் தோன்றுகிறது . மிகப்பெரிய குறை .. கிரிக்கெட் சங்கம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகம் கோலோச்சுவது போல அல்லாமல் எல்லா மக்களும் சாத்திய வேறுபாடு இன்றி சங்கம் அமைத்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்றால் அது நல்ல முன்னேற்றம் ஆக இருக்கும் . கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சி , அதுவும் கோவில் பணத்தை மற்ற மத பயணத்திற்கு உபயோகப்படுத்துவார்கள் என்றால் அது என்னை பொறுத்தவரை வெட்கக்கேடு / அசிங்கம் .
நாளை அல்லேலூயா கும்பலை அழைத்து , ஹிந்து கோவில்களில் சுவிசேஷ பிரசங்கம் நடத்துதல் , நள்ளிரவு பாவமன்னிப்பு வழங்கல் என்று திராவிட பைபிள் நலத்துறை நடத்திநாளும் வியப்பதற்கொன்றுமில்லை ..