சென்னை: கடந்த 2021ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் ஸ்டாலினின் மகனான உதயநிதி, செங்கலை வைத்து பிரசாரம் செய்தார்.

அந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியையும் பிடித்தது. இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தின்போதும், அமைச்சர் உதயநிதி பழையபடி செங்கலை வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கலை காண்பித்து உதயநிதி பேசுகையில், ‛இதுதான் பா.ஜ.,வும், அதிமுக.,வும் மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. செங்கல் மட்டும்தான் இருக்கிறது. பிரதமர் மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.300 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் இருந்தது ஒரு செங்கல்தான்' என கிண்டல் அடித்து பேசினார்.
அண்ணாமலை பதிலடி
இது பா.ஜ.,வுக்கு கடும் கோபத்தை எழுப்பியதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக நேற்று (பிப்.,20) அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பேசுகையில், ‛2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் இருக்கும்போது உதயநிதி தற்போது கையில் வைத்துள்ள செங்கலை போல, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கற்களால் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்துள்ளோம்' என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‛2009ல் திமுக தேர்தல் வாக்குறுதியில் தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்போம் எனக்கூறி 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கலைக்கூட வைக்கவில்லை. எனவே இந்த இடைத்தேர்தல் முடிந்ததும் தர்மபுரியில் சிப்காட் அமைக்க ஆயிரம் செங்கற்கள் உதயநிதியின் வீட்டின்முன் அடுக்கப்படும்' எனவும் பதிலடி கொடுத்தார்.
இப்படி மாறிமாறி செங்கலை வைத்து பிரசாரம் செய்தாலும், உதயநிதி செங்கலை வைத்து பேசியப்பிறகே பா.ஜ.,வும் செங்கல் ‛பாலிடிக்ஸ்'ஐ கையில் எடுத்துள்ளது. சட்டசபை பொதுத்தேர்தலுக்கு உதயநிதியின் செங்கல் ‛பாலிட்டிக்ஸ்' திமுக.,வுக்கு கைகொடுத்ததுபோல, இந்த இடைத்தேர்தலிலும் கைகொடுக்குமா என்பது மார்ச் 2ம் தேதி வெளியாகவுள்ள ஓட்டு எண்ணிக்கையின்போது தெரியவரும்.
ஆனால் உதயநிதியின் செங்கல் பிரசாரத்தால், இந்த இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கும் சேர்த்து பா.ஜ.,வுக்கு நெருக்கடியை தந்துள்ளது.
வாசகர் கருத்து (56)
டீம்கா ஆள் ராணுவ வீரரை கொன்றது செங்கல்.இத ஒத்துக்குவியா
அமிச்சர் எடுத்து அடிச்ச செங்கல்லை எதிர்கட்சி ஆட்கள் தூக்கிக் காட்டினால் இவங்க மானம் கப்பல் கட்டுமரம் எல்லாத்திலயும் ஏறும்
தமிழ்நாட்டுல ஒரு தடுப்பணையாச்சும் கட்டுனானுங்களா? சமாதி கட்டுறது சிலை வைக்குறது விளம்பர கல்வெட்டு இது தான் செய்வாநுங்க இந்த திருட்டு முன்னின்ற கழக கட்சி
மொத்தத்துல தி.மு.க மக்களை வூடு கட்டிட்டாங்க....
திமுக இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ்நாட்டிலே