Load Image
Advertisement

ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு

Special gift for children who sing Devaram before Adiyogi   ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு
ADVERTISEMENT
தொண்டாமுத்துார்: 'கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன் தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அறிக்கையில்,'தேவாரம் ஆழமான பக்தி மற்றும் உயிரோட்டத்தை வளர்த்து, இத்தன்மைகளை ஒருவரது வாழ்வின் அடித்தளமாக்குகிறது.

ஆதியோகி முன் தேவாரம் பாடும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, தினமும் சிறப்பு பரிசுகளை வழங்க உள்ளோம். தமிழ்நாட்டு குழந்தைகள் தங்கள் ஆழமான கலாசாரத்தை அறிய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

இரு நாட்களுக்கு முன், ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற சத்குரு,''12 வயதுக்கு கீழ் உள்ள தமிழ் குழந்தைகள், நம் நாட்டில் எங்கிருந்தாலும், வெளிநாடுகளில் இருந்தாலும், இங்கு வந்து தேவார பாடல் பாடினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படும். ஆண்டு முழுவதும் எந்த நாளிலும், தமிழ் குழந்தைகள் ஆதியோகி முன் தேவாரம் பாடிவிட்டு, பரிசுகளை பெற்று கொள்ளலாம்.

''கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தேவாரம் கற்றுக்கொண்டு, ஆதியோகி முன் தேவாரம் பாட நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் அனைவரும் நிகழ செய்ய வேண்டும்,'' என, கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (6)

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்.

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    ஒரு வாசகம் அது திருவாசகம். ஒப்புக்கொள்கிறேன். படிக்கவேண்டும்

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    அய்யா சாமி... தேவாரம், திருவாசகம் படிக்கணும்..னு நீ சொல்லி நாங்க கேக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.. எனது எட்டு வயது முதல் கல்லூரி படிக்கும் காலம் வரை, தேவாரம்,திருவாசகம் இவற்றை... என் அம்மா சொல்லித் தந்ததோடு, பரமாச்சாரியார் நடத்திய “நீதிபோதனை வகுப்பில்” கலந்து கொண்டு... அனைத்து பக்தி பாடல்களையும், செய்யுள்களையும், சமஸ்கிருத ஸ்லோகங்களையும் படித்து, அது மண்டைக்குள் ஏறி, இன்னும் அழியாமல் அப்படியே உள்ளது. இதை இப்பத்து குழந்தைகளுக்கு படிக்கச் சொல்லி நீ சொல்றப் பாரு? இதை சமக்குறவர்கள் நான்கு பேரும், அறுபத்திமூன்று நாயன்மார்களும் கேட்டாங்கன்னா.......?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்