நடிகர் மயில்சாமி உடல் தகனம்: பலர் கண்ணீர் அஞ்சலி
சென்னை: மாரடைப்பால் மறைந்த நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரளானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சென்னை வடபழநி ஏ.வி.எம் மின் மயானத்தில் மயில்சாமியின் உடல் இன்று (பிப்-20) தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் உதயநிதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, நடிகர்கள் ரஜினி, பிரபு, பாஸ்கர், கோவை சரளா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மயில்சாமி சிவ பக்தர் என்பதால் கைலாய வாத்திய இசைக்கருவிகள் மூலம் சிவபக்தர்கள் இசைத்தனர்.
இந்த சமூகத்திற்கு இழப்பு: ரஜினி புகழாரம்
நடிகர் மயில்சாமி மறைவு இந்த சமூகத்திற்கு பெரும் இழப்பு என்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று முன்தினம் பிப் 18 ( சிவராத்திரி ) நாளில் மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.
இன்று காலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்;
மயில்சாமியை எனக்கு இளம் வயதிலேயே தெரியும், அவர் எனது நீண்டகால நண்பரும்கூட . அவர் எம்ஜிஆர் ரசிகர், சிவபக்தர். என்னை சந்திக்கும் போது அவர் அடிக்கடி இருவரை பற்றிதான் அவர் பேசுவார். அவருடன் அதிக படங்களை நடிக்க முடியவில்லை. வாய்ப்பு இல்லாமல் போனது. அவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வார். அங்கிருந்தபடியே என்னிடம் போனில் பேசுவார்.
சில நாட்களுக்கு முன்பு 3 முறை தொடர்பு கொண்டார். ஆனால் என்னால் போனை அட்டண்ட் பண்ண முடியவில்லை. பேச முடியலன்னு சாரி கேட்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், திரைப்பட உலகில் விவேக், மயில்சாமி ஆகிய இருவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கு இழப்பு, இருவரும் சிந்தனைவாதிகள், சமூக அக்கறைவாதிகள். நான் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய அவர் ஆசைப்பட்டதாக கூறினர். நிச்சயம் ஆசையை நிறைவேற்றுவேன் .

மயில்சாமியின் இறப்பு தற்செயலாக நடக்கவில்லை , "இது அவனுடைய கணக்கு" சிவன் அவருடைய சிறந்த பக்தரை கூட்டிட்டு போயிட்டார். இவரது வாரிசுகள் எதிர்காலத்தில் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன். இவ்வாறு ரஜினி கூறினார்.
வாசகர் கருத்து (19)
ஒரு மிக பெரிய பொருளாதார நிபுணர் மறைவினால் தமிழகம் ஸ்தம்பித்தது... கூத்தாடியை கூத்தாடியாக மட்டுமே பார்க்கும் வரை தமிழகம் உருப்படாது....
நல்லவர்கள் வாழ்வார்கள்...
ஓம் ஷாந்தி.
ஓம் சாந்தி 🙏
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நான் படங்கள் பார்ப்பது குறைவே. இவர் படம் பார்த்ததே இல்லை. இருந்தாலும் ivarai பற்றி பலர் நல்லதாகவே விமரிசிக்கிறதய பார்க்கும்போது இவர் வாழ்க்கை மற்ற திரைப்பட நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூட நினைக்க தோன்றுகிறது ..எம்ஜிஆரை உதாரணமாக எடுத்து இவர் வாழ்ந்திருக்கிறார். இவர் இனிமேல் வரும் திரை உலக சந்ததிகளுக்கு எடுத்துக்காட்டு. சாவது உலகத்து இயற்கை. படுக்கையில் படுக்காமல் காற்றோடு கலந்திருக்கிறார். வஆழ்ந்தாலும் மறைந்தஆலும் பெயர் சொல்ல வேண்டும் பெயர் சொல்லப்படுகிறார், மயில்சாமி என்ற முருகன் சாமி. எப்போது மரணம் வரும் என்று யாருக்கும் தெரியாது. வாழும் வரை நல்ல பெயரோடு வாழ்ந்து போனபிறகும் பேசப்பட முயற்சிப்போம் அவர் போல.