Load Image
Advertisement

200 கோடி பேருக்கு யோகா: சத்குரு பேச்சு

Yoga for 200 Crores: Sadhguru Talks   200 கோடி பேருக்கு யோகா: சத்குரு பேச்சு
ADVERTISEMENT
கோவை: 'அடுத்த 24 மாதங்களில் 200 கோடி பேருக்கு ஏதாவது ஒருவகையில் யோகாவைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்கில், மகா யோக யக்ஞம் ஏற்றப்பட்டுள்ளது,” என, சத்குரு பேசினார்.

அவர் பேசியதாவது:

ஜனாதிபதியின் வருகைக்கு எங்களின் ஆத்மார்த்தமான நன்றி. மகா சிவராத்திரி தினமானது, சொர்க்கத்துக்கு செல்வதற்கான நாளல்ல. எவ்வித சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையை கொடுக்கும் நாளும் அல்ல. நமக்கான தேடலுக்கு வழிகாட்டும் நாள். தேடுதலைத் தீவிரப்படுத்தும் நாள்.

தேடல் வேறு நம்பிக்கை வேறு. நம் பாரதத்தில் ஒவ்வொரு 50 கி.மீ.,க்கும் மக்கள், பழக்க வழக்கம் என ஏராளமான வேறுபாடுகளைக் காண முடியும். ஆனால், நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரே தேசமாகவே இருக்கிறோம். வெளிநாட்டவர்கள் நம்மை ஹிந்த், ஹிந்துஸ்தானம், பாரதம் என ஒற்றை நாடாகவே பார்த்து வருகின்றனர்.

நமது தேடல், உண்மைக்கான தேடல். நம்பிக்கை என்பது முடிவுக்கு இட்டுச்செல்லும். பிரச்னைகளுக்கான முடிவுகளைத் தேடாமல், தீர்வுகளைத் தேடுபவர்களாகவே இருக்கிறோம். 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரம் நமக்கான தேடலைத் தீவிரப்படுத்தும். இங்கு ஜனாதிபதி, 'மகா யோக யக்ஞ'த்தை ஏற்றி வைத்துள்ளார். இதன் இலக்கு, அடுத்த 24 மாதங்களில், 200 கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் எளியமுறையிலாவது யோகாவைக் கொண்டு சேர்ப்பதாகும். இந்த சிவராத்திரி நன்னாளில் நமக்குள் உண்மைக்கான தேடலைத் தீவிரப்படுத்துவோம். இவ்வாறு, சத்குரு பேசினார்.


வாசகர் கருத்து (5)

  • venugopal s -

    ஆஹா,வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை, இருபதாயிரம் புத்தகங்கள் படித்தேன் என்பவை எல்லாம் சிறிய வடைகள் தான் என்பதை நிரூபித்து உலக மஹா வடை சுட்டு விட்டாரே இவர். இந்தியாவின் மக்கள் தொகையே நூற்று நாற்பது கோடி தானே,இவர் இருபத்து நான்கு மாதங்களில் இருநூறு கோடி பேருக்கு யோகா என்கிறார்.ஒரு நாளைக்கு இருபத்து எட்டு லட்சம் பேருக்கு யோகாவா? நம்ப முடியவில்லையே!

  • g.s,rajan - chennai ,இந்தியா

    அப்படியே நம்ம நாட்டுல உள்ள பல கோடி பேருக்கு வேலையும் போட்டுக் குடுங்க,நீங்க நல்லா இருப்பீங்க .

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தமிழ்நாட்டுல இந்த டாஸ்மாக் அடிமைகளுக்கு மொதல்ல யோகாவைக் கத்துக்கொடுக்கணும்,ஆனா அதற்காக மாநில அரசாங்கத்தின் எதிர்ப்பை சம்பாதித்தித்துக் கொள்ளக் கூடாது...

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    ஓம் நம: சிவாய

  • THENNAVAN - CHENNAI,இந்தியா

    அருமையான முன்னெடுப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்