Load Image
Advertisement

மீனாட்சி அம்மன் கோயிலில் வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதி வைத்த ஜனாதிபதி

The President wrote a note in the attendance register at the Meenakshi Amman Temple   மீனாட்சி அம்மன் கோயிலில் வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதி வைத்த ஜனாதிபதி
ADVERTISEMENT
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வந்திருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு. சாமி தரிசனம் செய்த பின் அங்கிருந்த வருகை பதிவேட்டில் தன் கைபட குறிப்பு எழுதி வைத்தார்.


கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலை தரிசனம் செய்தார். அதன் பின், கோவை சென்றார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் தமிழக பயணம், மதுரை மீனாட்சி கோவிலாக அமைந்தது. இதற்காக இன்று காலை, டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு மதுரை வந்தார். அவருடன் அவரது மகள் இடிஸ்ரீ வந்திருந்தார்.
Latest Tamil News
கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் அனீஷ் சேகர், தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மதியம் 12:00 மணிக்கு கோவிலுக்கு வந்த ஜனாதிபதியை, கவர்னரின் மனைவி வரவேற்றார். கோவில் சார்பில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ராஜதுரை வரவேற்றனர்.பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அம்மன், சுவாமி சன்னிதிகளில் பூக்கூடார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.


வழக்கமான அலங்காரத்துடன் இருந்த அம்மன், சுவாமியை தரிசித்த ஜனாதிபதிக்கு, கோவில் சார்பில் உலோகத்திலான அம்மன் சிலை, பரிவட்டத்திற்கு பதில் பட்டு புடவை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் பொற்றாமரைக் குளத்தில் கோபுர தரிசனத்தை பார்த்து விட்டு மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டார். புறப்படும் முன்னர்



புறப்படும் முன்னர் வருகைப் பதிவேட்டில் தமது அனுபவத்தை குறிப்புகளாக எழுதினார்.


அதில் '' பழமையான , வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயமிக்க கற்சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை தெய்வீக அனுபவத்தை கொடுத்துள்ளன. நாட்டு மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன்'' . இவ்வாறு அதில் குறிப்பு எழுதியுள்ளார்.


வாசகர் கருத்து (1)

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    விடியலு மிக கேவலம், நெறய வேலை, அதானி கூட பிசினஸ் டீல் பேச போய்ட்டாராம், ஜனாதிபதி வர வேற்க போகல, அது சரி கலாம் ன கழகம் னு சொன்ன கூட்டம் தான, அப்பன் புள்ள உபிஸ் எல்லாம் எப்பவும் நல்லது நெனைப்பதோ இல்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்