''சாப்பாடு நல்லா இல்லாம அவதிப்படுதாவ வே...'' என, கடைசி மேட்டரை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''சென்னை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்துல இருக்கிற, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி மாணவியர் விடுதியில தரப்படும் டிபன், சாப்பாடு தரமில்லாம இருக்கு... இது பத்தி, மாணவியர் புகார் பண்ணியும் பலன் இல்ல வே...
''வசதியான மாணவியர், வெளியில இருந்து, 'ஆர்டர்' பண்ணி சாப்பிடுதாவ... ஏழை, எளிய மாணவியர், விடுதி சாப்பாட்டை தான் நம்பியிருக்காவ... சமீபத்துல சாப்பாட்டுல, பூச்சி கிடந்திருக்கு வே...

''இதையும் நிர்வாகம் கண்டுக்கல... இந்தக் கொடுமைக்கு மத்தியில, சாப்பாட்டுக் கட்டணத்தை வருஷத்துக்கு, 22 ஆயிரம்னு இருந்ததை, 30 ஆயிரம் ரூபாயா ஏத்திட்டாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''டீ கடை பெஞ்ச் பகுதியை தொடர்ந்து படிக்கிற உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, இதையும் பார்த்துட்டு நடவடிக்கை எடுப்பாரு பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
வாசகர் கருத்து (6)
இறைச்சியை சரியான முறையில் சுத்தம் செய்வது இல்லை, உணவில் பூச்சிகள், புழுக்கள். சாப்பாடு நாங்கள் தரும் கட்டணத்திற்கு எந்த வகையிலும் ஏற்றது அல்ல. தயவு செய்து எங்களிற்கு உதவுங்கள்.எங்களது குறைகளை விடுதி அலுவலகத்தில் தெரிவித்தால் எங்களை பிளாக் மைல் செய்கிறார்கள்.
நான் இதே கல்லுரியில் தான் பட்டம் பெற்றேன். சில தினகலுக்கு முன் கல்லூரிக்கு மீன்டும் சென்று இருந்தேன் அப்போது A. C. Tech மெஸ்சில் தான் சாபிட்டேன். நான் பயின்ற நாட்களில் இருந்ததை விட உணவின் தரம் மிகவும் உயர்தபட்டுள்ளது. ஒரு சராசரி குடும்பத்தில் வாழும் எனகு இந்த உணவில் எந்த குரையும் தெரிய வில்லை. மேலும் நான் விசாரித வகையில் மாணவர்களுக்கு சத்து உள்ள காய்கரிகள் கூட முட்டை மற்றும் கோழி இரைச்சியும் கொடுகிரார்கள். இந்த செய்தி சிதரிகபட்டதாக தெரிகிரது.
Intha contractor-ஐ change பண்ணுங்க .
மாணவர்கள் பல விதமாக வேதனை படுகிறார்கள் உடல் நலம் குன்றி கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள் கடற்கரை கவலையை விட மாணவர்கள் நலன் முக்கியமல்லவா
எங்களிற்கு வழங்கப்பட்டு வரும் உணவுகளை உண்டால் நீங்கள்-லாம் வாழ்க்கையை வெறுப்பீர்கள்.