ADVERTISEMENT
சென்னை: 'இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக, ஆசை காட்டி மோசடி செய்யும் நிறுவனங்களில், முதலீடு செய்ய வேண்டாம்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்த 'எல்பின்' நிதி நிறுவனம், சென்னை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் மற்றும் நிலம் தருவதாக ஆசை காட்டி மோசடி நடந்துள்ளது.
மேலும், இந்நிறுவனம் சார்பில், அறம் மக்கள் நல சங்கம் டிரஸ்ட், அறம் 'டிவி' சேனல், தமிழ் ராஜ்ஜியம் என்ற பத்திரிகை பெயரை பயன்படுத்தியும் பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை என, 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.

இந்த மோசடி தொடர்பாக, 'எல்பின்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார், 48, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
மேலும், ரமேஷ்குமார் நடத்தி வந்த, 'இ - காம், மார்க்கெட் இந்தியா, வராகமணி, ஆர்.எம்.வெல்த் கிரியேஷன் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களில் பொது மக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாசகர் கருத்து (18)
ஆசையே அழிவுக்குக் காரணம்,இந்தியாவில் மிகப் பெரும் kodeeswarargalaa அம்பானிக்கு ,அதானிக்கு ஆசை இருக்கும் போது சாதாரண மனிதனுக்கு இருக்காதா என்ன..???
அதாவது திமுகவை நம்பி மோசம் போகவேண்டாம் என்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்
அதானி நிறுவனத்தில் முதலீடு செய்து நஷ்டமடைந்தவர்களுக்கும் டிஜிபியின் இந்த அறிவுரை நிச்சயம் பலனளிக்கும்.
காசு வாங்கிட்டு ஓட்டுங்கிற முதலீடு பண்ணுனவங்களை எச்சரிக்கிறார் ....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இந்தியாவில் அம்பானிக்கும் .அதானிக்கும் பணத்தின் மேல் ஆசை இல்லையா...அவர்களை விடவா மற்றவர்கள் பணத்திற்கு ஆசைப்படப் போகிறார்கள் ???....