Load Image
Advertisement

மதுரை மீனாட்சி கோயிலில் ஜனாதிபதி திரவுபதி சாமி தரிசனம்

President Draupathi Murmu visited Madurai Meenakshi Amman Temple today   மதுரை மீனாட்சி கோயிலில் ஜனாதிபதி திரவுபதி சாமி தரிசனம்
ADVERTISEMENT
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று(பிப்.,18)சாமி தரிசனம் செய்தார். கோயிலில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக மதுரை வந்த ஜனாதிபதியை, கவர்னர் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


மஹாசிவராத்திரியான இன்று கோவை ஈஷா மையத்திற்கு செல்லும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முர்மு வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி, வில்லாபுரம், தெற்குவாசல், கீழவாசல், விளக்குத்துாண் வழியாக மதியம் 12:00 மணிக்கு கோயிலுக்கு வந்தார். அம்மன், சுவாமியை தரிசித்துவிட்டு , விளக்குத்துாண், கீழவாசல், நெல்பேட்டை, ஏ.வி.பாலம், கோரிப்பாளையம் வழியாக சர்க்கியூட் ஹவுசிற்கு சென்றார்.

மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் முடிந்து காரில்கிளம்பிய திரவுபதி, சிறிது தூரம் சென்ற உடன் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி கீழே இழங்கிய அவர் மக்கள் நோக்கி வணக்கம் தெரிவித்தபடி சென்றார். பிறகு காரில் ஏறி சென்றார்.

Latest Tamil News
அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் அதேவழியாக விமான நிலையத்திற்கு திரும்பு கோவை புறப்பட்டு சென்றார் அவருடன் கவர்னர் ஆர்.என். ரவியும் சென்றார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவர் வரும் வழியில் இன்று காலை 11:00 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோயிலிலும் காலை 11:00 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.


வாசகர் கருத்து (24)

  • பாரதி -

    பாரதப் பண்பாட்டை மதிக்கும் அரசே... நீ வாழ்க, வளர்க...

  • எஸ் எஸ் -

    ஜனாதிபதியை வரவேற்க தமிழக அரசின் சார்பில் அறநிலையத்துறை மந்திரி ஏன் வரவில்லை? அது மட்டுமல்ல மாற்று மதத்தைப் பின் பற்றும் அமைச்சரை அனுப்பியது ஏன்?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பகலில் கோவில் நடை சார்த்த வேண்டும் என்று ஆகம விதிகள் ஏதும் கிடையாது. முருகனின் அறுபடை வீடுகளில் நடை சாத்தும் வழக்கம் இல்லை. அதேபோல் விஷேஷ நாட்களிலும் நடை சாத்தும் வழக்கம் இல்லை. இன்று சிவராத்திரி என்பதால் இரவு முழுதும் திறந்திருக்கும். டிசம்பர்31 நள்ளிரவு திறந்துவைப்பதுதான் ஆகமத்திற்கு எதிரானது....

  • Oru Indiyan - Chennai,இந்தியா

    மதுரை தமிழ்நாட்டில் தானே இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முதல்வர் என்று ஒருவர் இருப்பாரே அவர் நாட்டின் குடியரசு தலைவரை வரவேற்க மாட்டாரா . கொடுமைடா சாமி

  • எஸ் எஸ் -

    மதுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட "அறிவுமிக்க படைப்பாளி" சு. வெங்கடேசன் எங்கே எங்கே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்