தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் சுமார் 60 இடங்களில் இன்று (பிப்.,15) காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஜோதி நகரில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் (இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்) மாநில தலைவராக இருந்த உமரி என்கிற சையது ரகுமானின் (வயது 51) வீட்டில் அதிகாலை 5:30 மணி முதல் டிஎஸ்பி பாண்டே தலைமையிலான நான்கு பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூரில்
கர்நாடக மாநிலம் மங்களூருவில், 2022 நவ., 17ல் நடத்தப்பட்ட குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக, திருப்பூர் ராம் நகர் மற்றும் நல்லூர் பாத்திமா நகரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், பனியன் தொழிலாளிகள் முகமது ரிஸ்வான், 40 மற்றும் சிக்கந்தர் பாட்சா, 42 ஆகியோரிடம் மூன்று மணி நேரம் விசாரித்தனர்.மேலும், அவர்களிடம் விசாரணை நடத்த மூவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
திருவண்ணாமலையில்
கோவையில், கடந்த ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவமாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம், ஆதம்கார்டன் பகுதியை சேர்ந்த இருவர் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை, திருவண்ணாமலைக்கு வந்த, ஏழு பேர் கொண்ட குழு அதிகாரிகள், இதில், தொடர்புடைய சந்தேகப்படும்படியான நபரை பிடித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் மத்திய புலனாய்வு முகமை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. தமிழக போலீசார் அனைவரும் விசாரணையின்போது, போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
குன்னூரில் மேலும் இருவரிடம் விசாரணை
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக், 23ல் கார் குண்டு வெடிப்பில் ஐ.எஸ். பயங்கரவாதி ஜமேஷா முபின், 29 பலியானார். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில், குன்னுார் ஓட்டுப்பட்டறை, உமரிகாட்டேஜ் பகுதிகளில் ஆட்டோ டிரைவர், பெயின்டர் என இருவரிடம் விசாரணை நடத்தி, மொபைல்கள் வாங்கி சென்றுள்ளனர். தொடர்ந்து, விசாரணைக்காக இருவரையும், நாளை (16ம் தேதி) கோவையில் ஆஜராக உத்தரவிட்டு சென்றனர்.
வடகரை கிராமத்தில் சோதனை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்தவர் முசாவுதீன். அவரது மகன் முகமது பைசல்.32. இருவரும் மஸ்கட் நாட்டில் பணியாற்றி வருகின்றனர். வீட்டில் உறவினர்கள் உள்ளனர். இன்று காலை 6:30 மணிக்கு இனோவா காரில் வந்த மூன்று பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ). அதிகாரிகள் குழுவினர் முகமது பைசல் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நடைபெற்று வரும் சோதனையின் ஒரு பகுதியாகவே வடகரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு மாநில உளவு பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சோதனை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் முகமது பைசலின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து (6)
மேலப்பாளையம் & பொட்டல்புதூர் முக்கியமான பகுதி. நன்றாக சோதனை செய்யவும்
உலகத்திலேயே முஸ்லீம்களுக்கு அதிக உரிமையையும் பாதுகாப்பையும் அளிக்கும் நாடு இந்தியாதான் இருக்கும் இங்கு உள்ள முஸ்லீம்கள். உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டிலும் முஸ்லிம் நாட்டில்கூட பாதுகாப்பாக இருக்க முடியாது அதனால் இந்த உரிமையை பயன்படுத்தி தீவரவாதிகள் இங்கே தீவரவாதத்தை ஆரம்பிக்கிறார்கள்.
அனைத்து தேச விரோத கும்பலுக்கும்.... புகலிடமாக தமிழ்நாடு இருந்து வருகிறது... இங்குள்ள அரசு அவர்களிடம் மென்மையான போக்கை கடைப்பிடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மொத்த கும்பலையும் புடிச்சி உள்ள போடுங்க அதே மாதிரி இவங்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளையும் விராட்டி அடிங்க
தமிழகத்தில் செக்கூரிட்டி எமெர்ஜென்சி அறிவித்து, சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சியை கொண்டுவருவதும் மூலம், இந்த எல்லைமீறி இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊடுருவலை கட்டுக்குள் கொண்டுவந்து பிறகு, இதற்கு உதவி செய்த கட்சிகள் அதன் தலைவர்கள் அல்லக்கைகள் போன்ற அனைவரையும் ஒழித்து விடவேண்டும் ..இல்லையேல் தமிழகம் உருப்படாது ....