Load Image
Advertisement

ஜனவரியில் அதிக நிதி பெற்ற ஸ்டார்ட்அப்கள்: டாப் 5ல் சென்னை இல்லை

Most funded startups in January: Chennai not in top 5   ஜனவரியில் அதிக நிதி பெற்ற ஸ்டார்ட்அப்கள்: டாப் 5ல் சென்னை இல்லை
ADVERTISEMENT

புத்தாண்டின் முதல் மாதத்தில் இந்திய ஸ்டார்ட்அப்கள் 100 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி நிதி திரட்டியுள்ளது. அதில் 60 ஒப்பந்தங்கள் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்கள் உடையது. இதில் முதல் 5 இடத்தில் சென்னை நகரம் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.33 ஆயிரம் கோடி நிதி திரட்டியிருந்த நிலையில், சர்வதேச பொருளாதார நிலைமைகள் சரியில்லாத காரணத்தால் இந்த ஆண்டு முதலீடு குறைந்துள்ளது.

தற்போது முடிக்கப்பட்டுள்ள 101 ஒப்பந்தங்களில், 79 ஒப்பந்தங்கள் ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களுடையது. 22 ஒப்பந்தங்கள் வளர்ச்சி நிலையில் உள்ள நிறுவனங்களுடையது. கோவிட்டிற்கு பின்னர் ஸ்டார்ட்அப்களுக்கான முதலீடு குறைந்தது. பின்னர் 2021, 2022ல் அது அதிகரித்தது. பின்னர் உக்ரைன் போர், பணவீக்கம் போன்ற காரணங்களால் மீண்டும் தற்போது ஸ்டார்ட்அப்களுக்கான முதலீடு குறைந்துள்ளது.

ஜனவரி மாதம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெற்ற ஒப்பந்தங்களில், டாப் 5 இடத்தில் பெங்களூரு, டில்லி - என்.சி.ஆர்., மும்பை, புனே, ஐதராபாத் ஆகியவை உள்ளன. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் உள்ள ஸ்டார்ட்அப்கள் 60 ஒப்பந்தங்களை முடித்துள்ளன. டில்லி 15, மும்பை 10, புனே 6, ஐதராபாத் 5 ஒப்பந்தங்கள் மூலம் நிதிகளை பெறுகின்றன. இதில் பங்கேற்ற நிறுவனங்கள் பலவும், வணிகம், நிதிசார் தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம், மென்பொருள், மனிதவள தொழில்நுட்பம் சார்ந்தவை.
Latest Tamil News
ஆரம்ப நிலையில் உள்ள ஸ்டார்ட்அப்களான பீகான்ஸ்டாக், ப்யூல்படி, வில்கார்ட், டாடல், ரிகி, லோகேட், மும்பை ஆங்கோகேர் சென்டர், நியோக்ரோத், அதுல்யா, லேண்ட்டீட் ஆகியவை அதிகம் நிதி திரட்டிய டாப் 10 நிறுவனங்கள்.

வளர்ச்சியில் நிலையில் உள்ள ஸ்டார்ட்அப்களான போன்பே, கிரெடிட்பீ, என்சீன் பையோசயன்ஸ், வேக்பிட், லாக்9 மெட்டீரியல்ஸ், இன்சூரன்ஸ்தேகோ, சர்வாகிராம், மேட் ஸ்ட்ரீட் டென், ப்ளூ டோகாய், ஸ்ரியன்லேப்ஸ் ஆகியவை ஜனவரியில் அதிகம் நிதி திரட்டிய டாப் 10 நிறுவனங்கள்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement