ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன்,நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை,அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை.
திருவண்ணாமலையில் 4ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகைக்கடையில் கொள்ளை,போன்ற சம்பவங்களை பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லையோ என்ற கேள்வி எழுவதுடன்,நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியில்,பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.
தமிழகத்தில் மேலே குறிப்பிடபட்டுள்ள சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இதுவே சாட்சி.
இந்த விடியா அரசின் முதல்வர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுக்காப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
ஜெயலலிதா உயிரோடிருந்தால் தீ மு க்கா என்ற விஷ செடி கருகி போயாயிருக்கும்.உங்களால் முடிய வல்லை.
உங்களுக்குள் உள்குத்து உங்களிடம்.கோட்டைய்ய விட்டு இடம் கொடுத்து விட்டு இது என்ன கேள்வி
ஓட்டளித்தவர்களும், இனி ஓட்டளிக்கபோகும் தன்மானமற்றவர்களும் இருக்கும்வரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.
முன்னால் முதல்வர் கூறியது உண்மை. இந்த ஆட்சியில கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து வீணர்களை ஆட்சியில் அமர்த்தியவர்களே காரணம் ....