Load Image
Advertisement

கவர்னர் பதவியில் அரசியல் பேசக்கூடாது: இந்திய கம்யூ., ராஜா 

Dont talk politics in Governorship: Indian Comm., Raja   கவர்னர் பதவியில் அரசியல் பேசக்கூடாது:  இந்திய கம்யூ., ராஜா 
ADVERTISEMENT
கோவை : ''கவர்னர் பதவியில் இருப்பவர்கள் தங்களின் கட்சி அரசியலை பேசக்கூடாது,'' என, இந்திய கம்யூ., பொதுச்செயலாளர் ராஜா கூறினார். கோவையில் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம்.

ஆனால் அரசியல், கொள்கை நிலைகளில் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான், பிரதமர் மோடி, 'கம்யூனிசம் என்பது ஒரு அபாயமான சித்தாந்தம்' என்று சொல்கிறார். வரும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும் என்ற அரசியல் புரிதலோடு, மத சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்று படவேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் நிலைப்பாடு.

மாநில கவர்னர்கள் நியமனங்கள் என்பது அரசியல் நியமனங்களாக மாறி வருகின்றன. ஜார்கண்ட் மாநில கவர்னராக ராதாகிருஷ்ணனை நியமனம் செய்து இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கவர்னர் பதவியில் இருப்பவர்கள் தங்களின் கட்சி அரசியலை பேசக்கூடாது. அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது.கருணாநிதி மக்களுக்காக சிந்தித்து எழுதிய தலைவர். அவரது பேனாவை நினைவு சின்னமாக வைப்பதில் தவறில்லை. இதை அரசியலாக பார்க்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (31)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    கொடுத்த பணத்திற்கு வாயை வாடகைக்கு விடும் கட்சிகள் இருந்தால் என்ன, போனால் என்ன. அவர்கள் கூவிக்கொண்டே இருப்பார்கள்.

  • GANESUN - Chennai,இந்தியா

    ராஜா மைன்ட் வாய்ச்: வாய வாடக உட்றதுக்கு வாங்கின அட்வான்ஸ்ஸ கழிச்ச மாதிரி ஆச்சு அப்படியே 2024 க்கு துண்டு போட்டு வெச்ச மாதிரியும் ஆச்சு.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    மதசார்பற்ற கட்சிகள்தான் இந்தியாவில் இருப்பதெல்லாம் .எல்லோரும் , எல்லா மத மக்களும் சமமாக மதிக்க படும் ,பட வேண்டும் என்று சொல்லும் கட்சி மட்டுமே மத சார்புள்ள கட்சி .

  • மதுமிதா -

    கவர்னர்கள் ஊமையாக அல்லவா இருக்க வேண்டும் விவாத மேடையில் அர்த்தமே இல்லாமல் காசுக்கு கூச்சல் போடும் காரியவாதிகள் கம்யூனிஸ்டுகள்? எதற்குசாகொள்கைமாறா திரு நல்லகண்ணு விற்கு பின் யாருமே இல்லையே

  • Anand - chennai,இந்தியா

    இவன் இன்னும் இருக்கானா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்