ADVERTISEMENT
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வில் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்யும் நிலையில், காங்., கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டாமல், புறக்கணிப்பதாக, தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்., கட்சி, தலைவர்களின் கூடாரமாகவும், கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. கட்சியில், நல்லது, கெட்டதுகளில் தனித்தனியாக தலைகாட்டி, 'நாங்களும் கோஷ்டியாக' உள்ளோம் என வரிசை கட்ட மட்டுமே ஆர்வம் காட்டுவர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., நிற்க திட்டமிட்டது. ஆனால், திருமகன் இறந்த இரண்டாவது நாளிலேயே தமிழக காங்., தலைவர் அழகிரி, வேலுாரில், 'அத்தொகுதி காங்.,குக்கானது. மீண்டும் அங்கே நாங்கள் போட்டியிடுவோம்' என்றார்.
இதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், காங்.,குக்கு ஒதுக்கியதுடன், இளங்கோவனை போட்டியிட வலியுறுத்தி நிறுத்தினார்.வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே, மாவட்ட அமைச்சர் முத்துசாமி, தேர்தல் பணிக்குழு தலைவர் நேரு தலைமையில் ஜன., 22ல் தி.மு.க.,வினர் பிரசாரத்தை துவக்கினர்.

அடுத்தடுத்த நாளில், 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
ஆனால், மாநில காங்., தலைவர் அழகிரி முதல், முன்னாள் தலைவர்கள், காங்., - எம்.எல்.ஏ., - எம்.பி.,கள் இதுவரை பிசாரத்துக்கு வராததால், தி.மு.க.,வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த முறை, 9,000 ஓட்டில் வென்ற நிலையில், இம்முறை, 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்று வெற்றி பெற வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள், பிரசாரத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.
பணத்தையும் தண்ணீராக வாரி இறைக்கின்றனர். ஆனால், காங்., கட்சியில் தமிழக முன்னாள் தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., என பலர் இருந்தும் ஒருவர் கூட, ஒரு நாள் கூட பிரசாரத்துக்கு இதுவரை வரவில்லை.
காங்., தலைவர்கள் சோனியா, ராகுலை நேரடியாக தொடர்பு கொள்ளும் அதிகாரம் கொண்ட இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டும், இவர்கள் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் பிற கட்சி முதுகில் பயணித்து பழக்கமாகி விட்டதால், தங்கள் கட்சி வேட்பாளருக்கு பணி செய்யக்கூட, தலைவர்கள் எவரும் முன்வரவில்லை.
பிரசாரம் செல்லும் இடங்களில் காங்., தொண்டர்கள், அவர்களது கட்சி கொடியுடன் கூட வருவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (28)
காங்கிரசு ஜெயித்தால் டோக்கன் காங்கிரசு அல்லது டோக்கன் என்ற அடைமொழியுடன் வெற்றிபெறும் நபரின் பெயரை சேர்த்து சொல்லலாமே.
2G ல எவ்வளவு பாலன்ஸ் இருக்குன்னு அவங்களுக்கு தெரியாதா? அதிலிருந்து எடுத்து செலவு செய்யட்டுமே என்ற எண்ணம்தான்.
காங்கிரஸ் கட்சி என்ன வைத்துக் கொண்டே வஞ்சகமா செய்கிறார்கள்? அவர்கள் கட்சி பலமே அவ்வளவு தான்!
இதற்கு பரப்புரை செய்ய ராகுல் வதேரா கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் தோற்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தமிழ்நாடு காங்கிரசு மாநில தலைவர்கள் இந்த தேர்தலை என்றோ புறக்கணிக்க துவங்கிவிட்டார்கள். காரணம் உள்குத்துதான். இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் வெற்றி பெற்றால் தமிழ்நாடு மாநில தலைமை மாற்றப்படும். அங்கத்தினர்கள் மாற்றப்படுவார் - ஆட்சியே மாறும் திராவிட மாடல் ஆட்சியின் கப்பம் கட்டும் மாநில காட்சியாகிவிடும் என்ற பயம்தான். தலைவிதி யாராலும் மாற்றமுடியாதே