கூட்டணி வைத்து அரசியல் செய்தால் தமிழகத்தில் பா.ஜ., வளராது: சுப்பிரமணியசாமி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, பா.ஜ., ஏதும் செய்யவில்லை. நான் ஏதாவது கூறினால், கட்சிக்குள் தலையிடுகிறார் என கூறுவர்.
நானும் பா.ஜ.,தான். ஆனால், தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் உள்ள பா.ஜ.,வில் இருக்கிறேன். மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல, தமிழகத்தில் பா.ஜ., துடிப்புடன் இல்லை.
தனித்து போட்டி
டில்லியில் இருந்து பத்திரிகைகள், அறிக்கைகள் வாயிலாக, தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க முடியாது. தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., என மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் செய்தால், தமிழகத்தில் பா.ஜ., வளராது.
தமிழகத்தில் பா.ஜ., தனித்து நிற்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிட வேண்டும்; அப்போதுதான் பா.ஜ., வளரும்.
தி.மு.க.,வுக்கு கொள்கை கிடையாது; நாட்டை பிரிப்பது குறித்து பேசியபடியே இருப்பர். ஆனால், தேர்தலின்போது வேறு விதமாக பேசுவர். என் முயற்சியால், ஏற்கனவே தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நீக்கப்பட்டது.
அப்போது, 'ரத்த ஆறு ஓடும்' என வீரமாக பேசினர். ஆனால், ஒரு பூனைக் குட்டி கூட வெளியில் வரவில்லை. அதனால், தி.மு.க., குறித்து யாருக்கும் கவலை இல்லை. அது ஒரு கட்சியோ, இயக்கமோ இல்லை. நாட்டை பிரிப்பதற்காக, அதை துவங்கினர். தற்போது, ஊழலோ ஊழல் என, அக்கட்சி இருக்கிறது.
வழக்கு
கோவில் விஷயத்தில் அநாகரிகமாக நடந்தால், அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
தமிழகத்தில் உள்ள கோவில் பூசாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு மிகவும் தொல்லை கொடுக்கின்றனர். இங்குள்ள தி.க.,வினர், கோவில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி, கஷ்டம் கொடுக்கின்றனர்.
நாட்டில் 80 சதவீதம் ஹிந்துக்கள் உள்ளனர். எனவே, ஹிந்துக்களை இவர்கள் யாரும் ஏதும் செய்ய முடியாது.
பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முயற்சிக்கிறாரா என்பது எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
ஆம் ஈரோடு வாய்ப்பை பா.ஜ.க நழுவவிட்டது கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக இல்லை
சொல்வது சரி தனித்து நிற்க வேண்டும். கூட்டணியால் மீது...
இரண்டுக்கும் மாற்று என்று சொல்லியதால் தான் நாம் தமிழர் செல்வாக்கு பெற்று வருகிறது பாஜக இது செய்ய தயங்குவது ஏன் மாநில தலைமையா தேசிய தலைமையா ??? புரியாத புதிர்.
இரண்டு ஊழல் கலகஙளுக்கும் பெரிய வித்யாசம் கிடையாது கொள்ளை ஓன்று தான் பொதுவான கொள்கை
வக்கீல் என்பதால், கோர்ட் தீர்ப்பு ஏதோ நாட்டையே மாற்றிவிடும் என்று நம்புகிறார். பாவமா இருக்கு.