Load Image
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: சதம் விளாசினார் ரோகித்: இந்தியா முன்னிலை


நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித் சதம் விளாசினார். ஜடேஜா அரைசதம் கடக்க, முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை பெற்றது.

Latest Tamil News


Tamil News
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா 77/1 ரன் எடுத்து 100 ரன் பின்தங்கி இருந்தது. ரோகித் சர்மா (56), அஷ்வின் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 23 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாரா (7) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 12 ரன்னில் திரும்ப, அறிமுக வீரர் சூர்யகுமார் 8 ரன்னில் போல்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித், டெஸ்ட் அரங்கில் 9 வது சதம் எட்டினார்.

Latest Tamil News

ஒருநாள், 'டி-20', டெஸ்ட் என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் ஆனார். இவர் 120 ரன் எடுத்து வெளியேறினார். அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் தன் பங்கிற்கு 8 ரன் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 321 ரன் எடுத்து 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்