Load Image
Advertisement

கோவில் சொத்தை சுருட்டிய தி.மு.க., நிர்வாகி!

DMK, administrator who rolled the temple property!   கோவில் சொத்தை சுருட்டிய தி.மு.க., நிர்வாகி!
ADVERTISEMENT
'ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் சொத்தை, தி.மு.க., நிர்வாகி தட்டிட்டு போக பார்க்கிறாருங்க...'' என, கடைசி தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

''எந்த இடத்துலன்னு விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னை, மேற்கு மாம்பலம் மேட்லி சாலை பக்கத்துல, 350 வருஷம் பழமையான, காசி விஸ்வநாதர் கோவில் இருக்குதே... இதுக்கு சொந்தமா கோடிக்கணக்குல சொத்துக்கள் இருக்குதுங்க...

''இதுல, மேட்லி ரயில்வே சுரங்க பாதை பக்கத்துல இருக்குற, 5,400 சதுர அடி கட்டடத்தையும், சின்ன நிலத்தையும், அதே பகுதியைச் சேர்ந்த இருவர், 1962லயே, 99 வருஷ குத்தகைக்கு எடுத்தாங்க...
Latest Tamil News
''குத்தகை எடுத்தவங்க ஒழுங்கா வாடகையை கட்டாம, 66 லட்சம் ரூபாய் பாக்கி வச்சதால, ஹிந்து சமய அறநிலையத் துறை, அவங்களை காலி செஞ்சு, கட்டடத்துக்கு, 'சீல்' வச்சிடுச்சுங்க...

''அங்க இருந்த மூணு கடைகளும், மூணு வீடுகளும் பல நாட்களா பூட்டி கிடந்துச்சு... இது, தி.மு.க., வட்ட நிர்வாகி கண்ணை உறுத்த, மனுஷன் பூட்டை உடைச்சு உள்ள பூந்துட்டாரு... இப்ப, அந்த கட்டடங்களுக்கு சொந்தம் கொண்டாடுறாருங்க...

''இது சம்பந்தமா ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் குடுத்தும், நடவடிக்கை இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமி, ''ஹலோ மிஸ்டர் செந்தில்குமார்...'' என, நண்பரை பார்த்து பேசியபடியே நடக்க, சபை கலைந்தது.


வாசகர் கருத்து (18)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கோவில் சொத்தை திருடினவர்களில் திமுக என்றால் முதல் பக்கத்தில் போடுகிறீர்கள். பரவாயில்லை.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அவர்கள் தொழிலை செய்ய விடுங்கள்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஹிந்துக்கள் சூடு சுரணை அற்றவர்கள் என்பதால்தான் ஹிந்து கோவில் சொத்துக்களை திமுகவினர் சூறை ஆடுகிறார்கள். பாருங்கள் வேறு எந்த மத வழிபாட்டு ஸ்தலங்களையாவது அவர்கள் சூறை ஆடுகிறார்களா என்று...

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    எங்கே அந்த மனவாடு பாபு? ஓங்கோலும் கைகோர்த்து செய்யும் சதிதான் இது. கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வது தெரியவில்லையா மக்களுக்கு?

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    கருணாநிதி எப்பொழுதும் பாயில் தான் படுப்பாராம். ஏனென்றால், எழுந்தவுடன் அவருக்கு எதையாவது சுருட்ட வேண்டும் என்பதால். இன்றைய திமுக கருணாதியால் வளர்க்கப்பட்டது. அண்ணாதுரை ஏற்படுத்திய திமுக 1970 லேயே இறந்து விட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement