Load Image
Advertisement

நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை : மூன்று பேரை தாக்கியது

Tamil News
ADVERTISEMENT
காசியாபாத்: உத்திரபிரதேசத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை மூன்று பேரை தாக்கி காயப்படுத்தியது.


உபி . மாநிலம் காசியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கம் போல் அலுவலக பணிகள் நடந்து கொண்டிருந்தன. இன்று மாலை 4 மணியளவில் மெயின் வாசல் வழியாக கோர்ட் வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்தது. முதல் தளத்தில் தலைமை நீதிபதி அலுவலகஅறைக்குள் புகுந்ததை கண்ட அங்கிருந்த சில வழக்கறிஞர்கள், போலீசார் பொதுமக்கள், கோர்ட் வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.

Latest Tamil News

அப்போது சிலர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர் கோர்ட் அறை ஒன்றிற்குள் புகுந்தது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அறையை கேட்டை மூடி சிறுத்தை சிறை வைத்தனர். சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு,காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறுத்தை பிடிபட்டது



தொடர்ந்து சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் விட கொண்டு சென்றனர்.



வாசகர் கருத்து (10)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ‘எங்களுக்கான காட்டையெல்லாம் அம்மரமித்துவிட்டீர்களே, எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதி கேட்க வந்திருக்கும் எல்லா வனவிலங்குகளுக்கான வக்கீல் போலும்

  • பிரபு - மதுரை,இந்தியா

    என்னங்க வாய்தா வாய்தான்னு இழுத்துக்கிட்டு. குற்றவாளிகளுக்கு நான் தாரேன் தண்டனைன்னு உள்ள வந்திருக்குமோ?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நீதி மான்களைத் தேடி வந்திருக்கலாம் ...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    நீதி தேவதை சிறுத்தை ரூபத்துல வந்திருக்கும் போல இருக்கு ....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவுல நீதிமன்றத்துல நிறையக் கரடி விடறாங்க போல இருக்கு,அதுதான் சிறுத்தைக்கே ரொம்ப ரொம்ப கோபம் வந்திருச்சு .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்