புதுடில்லி: லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசையும், அக்கட்சி எம்.பி., ராகுலையும் கடுமையாக விமர்சித்தார்.
பிரதமர் பேசியதாவது: ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தில் கலந்து கொண்டு, தங்களது வாதங்களை முன்வைத்தனர். எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. பார்லிமென்டில் ஒவ்வொருவரும் தங்களது குணநலனுக்கு ஏற்பட உரையாற்றினர்.
சிலரின் பேச்சு அவர்களை மக்களிடையே அம்பலப்படுத்தியது. சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று பேசியதை கேட்ட மகிழ்ச்சியில் சிலர் நன்கு உறங்கிவிட்டனர். அவர்களால் உரிய நேரத்தில் எழுந்து அவைக்க வரமுடியவில்லை.
ஒருவர் கூட ஜனாதிபதி உரை பற்றி குறிப்பிடவில்லை. இதற்கு பின்னால் உள்ள காரணத்தை மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால், ஜனாதிபதி உரையை அனைவரும் ஏற்று கொண்டனர். ஜனாதிபதி உரையை சிலர் புறக்கணித்தனர். பெரிய தலைவர் ஒருவர் ஜனாதிபதியை அவமதித்தார். இது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. நேற்று முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எம்.பி.,க்களில் பலர் அவைக்கு வரவில்லை என ராகுலை மறைமுகமாக விமர்சித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்
ஐ.மு., கூட்டணி ஒவ்வொரு வாய்ப்புகளையும் பிரச்னையாக மாற்றியது. நாட்டில் பெரும்பான்மையான ஊழல், கடந்த 2004 முதல் 2014 வரையே நடந்தது. ஊழலுக்கான சகாப்தமாக இருந்தது. காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் காரணமாக நமது வீரர்களால் சாதனை படைக்க முடியவில்லை.
இந்த தசாப்தம் இந்தியாவிற்கான தசாப்தம். நெருக்கடியில் உள்ள சிலர், இந்தியாவின் வளர்ச்சி பாதையை கண்டு சிலருக்கு வருத்தம். நிர்பந்தத்திற்காக எந்த சீர்திருத்தங்களையும் நாங்கள் செய்யவில்லை. ஜனநாயக நாட்டில் விவாதம் என்பது முக்கியமான விஷயம்.
பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் சிலர் ரிசர்வ் வங்கி குறித்து குற்றம்சாட்டுகின்றனர். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அரசு நிறுவனங்கள் அவமானப்படுத்தப்பட்டன. துணிச்சலுடன் இருந்ததற்காக பாதுகாப்பு படைகள் மீது அவதூறு பரப்பப்பட்டன.
நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இல்லாத போது நீதிமன்றங்களையும் அவதூறு செய்தனர்.தேர்தலில் தோற்ற போது தேர்தல் ஆணையத்தையும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும் அவதூறு செய்தனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் பசையாக அமலாக்கத்துறை உள்ளது. இதற்காக அந்த அமைப்புக்கு எதிர்க்கட்சிகள் நன்றி தெரிவிக்க வேண்டும்.
வருங்காலத்தில் காங்கிரசின் வீழ்ச்சி குறித்து ஹர்வர்டு பல்கலை ஆய்வு செய்யும்.நாடு வளர்ந்து வரும் நேரத்தில் பிற நாடுகளை தாழ்த்தி பேசுவதாக சிலர் புகார் கூறுகின்றனர்.வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையாதவர்கள், தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
மோடியை விமர்சித்தால் மட்டுமே தங்களால் பிழைக்க முடியும் என சிலர் நினைக்கின்றனர். 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் என்னை விமர்சித்து வருகின்றனர். மோடி மீதான நம்பிக்கை பத்திரிகை தலைப்பு செய்திகள் மூலமோ, டிவிக்களில் முகம் காட்டியதாலோ கிடைக்கவில்லை.
எனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாட்டிற்காகவும், நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணித்துள்ளேன். விமர்சனங்களில் இருந்து என்னை காக்கும் கவசமாக மக்களின் ஆதரவே இருந்தது. மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது.
காஷ்மீருக்கு சென்ற நீங்கள் எவ்வளவு உலா வந்தீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். தங்களின் குடும்பத்திற்காக சிலர் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட செய்தனர். எதிர்க்கட்சிகளின் விமர்சன அரசியலை மக்கள் நிராகரிப்பார்கள். எதிர்க்கட்சிகளின். லால்சவுக்கில் இதற்கு முன்னர் யாரும் தேசியக்கொடி ஏற்றியதில்லை. புல்லட் புரூப் ஜாக்கெட் இல்லாமல் நானும் காஷ்மீருக்கு ஜன.,26ல் காலை 11 மணிக்கு செல்வேன். எங்களின் திரிரங்க யாத்திரையில் ராகுலும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்., எதிர்ப்பு
பிரதமர் மோடி பேச துவங்கியதும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோஷம் போட்டனர். அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பேசிகொண்டிருந்த போதும் கோஷம் போட்டனர். காங்கிரசின் ஊழல் குறித்து மோடி பேசியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர். பிறகு உள்ளே வந்தனர். காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., எம்.பி.,க்கள் 'மோடி... மோடி' என கோஷம் போட்டனர்.
வாசகர் கருத்து (31)
எதிர்க்கட்சிகள் , பொத்தாம்பொதுவாக பேசாமல் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆதாரங்கள் கொண்டு பிரதமரை மடக்கலாமே....உண்மையிலேயே பிரதமர் மற்றும் அமைச்சர் இலக்காக்கள் மீது ஊழல் இருந்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கடலாமே ? இங்கே ஜெ மீது கருணாநிதி மற்றும் சுப்ரமணியசாமி தொடுத்தமாதிரி. ?? அதானி மற்றும் அவர்கள் குழுமம் விதிமீறி சொத்துக்கள் சேர்த்திருந்தால் அதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தலாமே ?? அதற்குத்தான் பாராளுமன்றம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கலாமே ?? எதிர்க்கட்சிகள் இதில் ஒற்றுமையாக இருக்கலாமே ??
இன்னமும் இருபது ஆண்டுகள் மோடிஜிதான் நாட்டின் பிரதமராக இருக்கவேண்டும்
பிஎம் கேர்ஸ்ஐ விட பெரிய ஊழல் இருக்குமா?
சும்மா அர்த்தமில்லாம கேக்குற கேள்விக்கெல்லாம் பிரதமர் நேரத்தை செலவழித்து பதில் சொல்லத்தேவையில்லை. அவர் நேரம் பொன்னானது. இனிமேலாவது அவர் ஏதாவது மந்திரியையோ அல்லது MP யயையோ பதில் சொல்ல வைக்கவேண்டும். அரைவேக்காடு பயலுகளுக்கு போயி அவ்வளவு பெரிய பிரதமர் பதில் சொல்வதா? அந்த அளவுக்கு அவர்கள் ஒர்த்ததே இல்ல.
விளாசியதெல்லாம் சரி தான். ஆனால் அவரது கேள்விகளுக்கு ஒரு பதில் கூட சொல்லவில்லையே? ஏன்?