மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில்இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 2018 ம் ஆண்டிற்கு பிறகு அதிகபட்சமான வட்டியாக 6.50 சதவீதம் உள்ளது.
உலக பொருளாதாரம் அத்தனை கவலையளிக்கும் விதமாக தற்போது இல்லை. பணவீக்கமும் குறைந்து வருகிறது. 2023 -24 ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும். உலக நாடுகள் பலவற்றின் பொருளாதார நிலை, கொந்தளிப்பாக இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. சில்லறை பணவீக்கம் நான்காவது காலாண்டில் 5.6 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக, வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (41)
சூப்பர் கண்டுபிடிப்பு...சர்வதேச அளவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசே இந்தியாவுக்குக் கொடுக்கலாம் இந்தியாவில் விலைவாசி குறையணும்னா ரெப்போ ரேட்டை விண்ணை முட்டும் அளவுக்கு ஏத்திவிட்டுடுங்க.வட்டி அதிகமா இருக்கறதால ஒரு பய நாட்டுல கடன் வாங்க மாட்டான் விலைவாசியைக் குறைப்பதில் மற்ற நாடுகளுக்கும் இந்தியா ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கட்டும் ...
விலைவாசி குறையணும்ன்னா இன்னும் சகட்டுமேனிக்கு ரெப்போ ரேட்டை ஏத்திவிட்டுங்க ,விலைவாசி ரொம்ப ரொம்பக் கொறஞ்சிடும் ,கொஞ்சம் கொஞ்சமா ரெப்போ ரேட்டை கொஞ்சம் கொஞ்சமா ஏத்திக்கிட்டே இருந்தா இந்த ஜென்மத்தில் விலைவாசி குறையாது ...
அமெரிக்காவுக்கு புத்திமதியா
காலரைத் தூக்கி விட்டுக்குங்க ....
இந்தியாவில் ஆட்சி நடத்தும் மிகத் திறமையான அரசாங்கம் ,மிக மிகத் திறமையான அதிகாரிகள்.,திருஷ்டி தான் சுத்திப் போடணும்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
கோட் ,சூட் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு .