Load Image
Advertisement

கடும் பனிப்பொழிவு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT


மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி குத்தாலம், சீர்காழி ஆகிய பகுதிகளிலும் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கடுமையாக பனிப்பொழிவு காணப்பட்டதை அடுத்து இரண்டாவது நாளாக இன்றும் இரவு முதலே அதிகமான குளிர் நிலவிவந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

குறைந்த தூரத்தில் இருக்கின்ற பொருள் கூட தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டுபடியே குறைவான வேகத்தில் செல்கின்றன. நடைபயிற்சி மேற்கொள்வோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்லோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையில் சாய்ந்த சம்பா சாகுபடி தாளடி நெற்பயிர்கள் மற்றும் இளம் நெற்பயிர்களில் மழை, பனி என மாறி மாறி பெய்வதால் புகையான் தாக்கம் அதிகரிக்கும் எனவும் விவசாயிகள் அச்சத்தில் இருப்பதுடன் நெற்பயிர்கள் காயாத நிலையில் அறுவடை செய்ய முடியாது எனவும் கவலை அடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement