Load Image
Advertisement

அதிகாரிகளை நோகடிக்கும் மந்திரிகளின் ஐ.டி., விங்!

IT, Wing!   அதிகாரிகளை நோகடிக்கும் மந்திரிகளின் ஐ.டி., விங்!
ADVERTISEMENT
''அமைச்சர்களின் ஆட்கள், அதிகாரிகளை தரக்குறைவா நடத்தறாளாம் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள் அத்தனை பேருமே, சமூக வலைதளங்கள்ல தனித்தனியா கணக்கு வச்சிண்டு இருக்கா... அவா கலந்துக்கற அரசு விழா, கட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை இதுல போட்டுடறா...

''இந்த வேலையை செய்யறதுக்காகவே, ஒவ்வொரு அமைச்சரும் தனியா, 'ஐ.டி., விங்' வச்சிருக்கா... இந்த தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்கள் அமைச்சர்களின் நிகழ்ச்சிகள் குறித்து, துறை அதிகாரிகளிடம் கேட்டு தகவல் தெரிஞ்சுப்பா...
Latest Tamil News
''அவா விபரங்களை சரியா கொடுத்தாலும், 'ஐ.டி., விங்' இளைஞர்கள் ஏதாவது குத்தம் குறை சொல்லி, வாய்க்கு வந்தபடி திட்டி, தரக்குறைவா பேசறாளாம்...

''நொந்து போன அதிகாரிகள் இது சம்பந்தமா, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிவரை விஷயத்தை எடுத்துண்டு போயிட்டா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (5)

  • Godyes - Chennai,இந்தியா

    பூமியில் அமர்ந்து எழுத உதவிய பேனாவை கடலில் நிற்க வைத்தால் அதில் இங்க் இருக்குமா. அப்படி ஊற்றினாலும் கடலில் கரையாதா.

  • Godyes - Chennai,இந்தியா

    இனி மேல் ரப்பர் ஸ்டாம்புகளுக்கெல்லாம் கடலில் சிலை வைக்கப்படும்.

  • Godyes - Chennai,இந்தியா

    பேனாவை நிற்க வைப்பதற்கு பதிலாக படுக்க வைத்தால் என்ன.

  • Godyes - Chennai,இந்தியா

    டீ கடை பெஞ்சில் அரட்டை அடிக்கும் குப்பண்ணாவுக்கு ஒரு பெரிய ரோஜாப்பூ மாலைய சாத்தணும் ஓய்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement