Load Image
Advertisement

நெய், வெண்ணெய் இல்லை; ஆவினில் தொடரும் தட்டுப்பாடு

Tamil News
ADVERTISEMENT
சென்னை : அதிகாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் கூட்டணியால், ஆவினில் நெய் மற்றும் வெண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆவினில் பாலுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு, 12 ரூபாய் அதிகரித்தாலும், கொள்முதல் விலை உயர்வால், உற்பத்தி செலவில் இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், ஆவின் நெய், வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. உற்பத்தியாகும் நெய், வெண்ணெய் ஆகியவற்றை மொத்த வியாபாரிகள் வாங்கி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விற்று வருகின்றனர். இதனால், பாலகங்களில் நெய், வெண்ணெய் தட்டுப்பாடு தொடர்கிறது.

Latest Tamil News
மொத்த விற்பனையாளர்களுடன், ஆவின் விற்பனைப் பிரிவு அதிகாரிகள் கைகோர்த்து, லாபம் பார்த்து வருகின்றனர். துறையின் முக்கியப் புள்ளி பரிந்துரைப்படி, இந்த நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கி உள்ளதால், அவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைக்கு, உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இதனால், நுகர்வோர் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இனியாவது, ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

12 மேலாளர் மாற்றம்



சென்னையில் ஆவின் பொருட்கள் விற்பனைக்காக, 21 மண்டல அலுவலகங்கள் உள்ளன. தற்போது, பாலில் கொழுப்பு சத்து குறைவு, எடை குறைவு போன்ற குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், 12 மண்டல மேலாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விற்பனையை அதிகரிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



வாசகர் கருத்து (18)

  • adalarasan - chennai,இந்தியா

    இவர்கள் ஆட்சியில் சகஜமாக நடப்பதுதான்.இதை சரி செய்ய,,, முதலமைச்சரை வேண்டுகிறேன்.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்த மக்கள் விரோத அரசு தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக தூக்கி எறியப்படவேண்டும் .

  • Kanakala Subbudu - Chennai,இந்தியா

    ஒவ்வொரு முறை தி.மு.க ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இது வழக்கம் தான்

  • R Kay - Chennai,இந்தியா

    ஆனால், எடுத்து ஏறிய கல் மட்டும் நிறைய கிடைக்கிறதாம்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    எந்த ஒரு நிறுவனத்தையும் தொடங்கி சிறப்பாக கொண்டுவந்தபின் அதை உடைத்து அழிக்க ஒரு மூர்க்கனால் மட்டுமே முடியும். நாசர் அதை செய்கிறான்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்