கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
கோவை: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, 6 பேரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில், 2017 ஏப்., 23ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, 12 பேர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். வழக்கில் உண்மையை கண்டறியும் நோக்கத்துடன், ஜெ., தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
![Latest Tamil News]()
நேற்றும் கோவை சி.பி.சி.ஐ.டி., முகாம் அலுவலகத்தில், கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், வினோத், செல்வம், மணிகண்டன், ஜெயசீலன் ஆகிய, 6 பேரிடம் டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவர்களில் செல்வம், கோடநாடு எஸ்டேட்டில் சிறு வேலைகளை செய்து வந்தார். நீலகிரி மாவட்ட ஜெ., பேரவை நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இப்போது அ.ம.மு.க.,வில் இருக்கிறார்.கிருஷ்ணமூர்த்தி, கோடநாடு எஸ்டேட்டில் வேலை பார்த்தவர்.
மணிகண்டன், ஜெயசீலன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ராஜேஷ், வினோத் ஆகியோர் கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள். வெவ்வேறு கோணங்களில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்த ஆட்சி முடியும் வரை விசாரணை மட்டும் நடத்தி கொண்டே இருப்பார்கள். ஏற்கனவே 10 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தினார்கள் , ஒரு ஆண்டு கடந்து விட்டது. இன்னும் ஒருவர் மீது கூட சார்ஜ் சீட், கைது நடவடிக்கை எதுவும் இல்லை. அதுவும் இந்த ஆட்சி முடியும் வரை விசாரணை மட்டும் நடத்தி வருவார்கள்.