ADVERTISEMENT
சென்னை: 'தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில், பல்வேறு இடங்களில் பரவலாக, மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும், வட மாவட்டங்களில் தொடர்ந்து, வறண்ட வானிலையே காணப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளிர் அதிகரிப்பு
சென்னை புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சில நாட்களாக, பகலில் வறண்ட வானிலை காணப்பட்டாலும், அதிகாலையில் பனிப் பொழிவும், குளிரும் அதிகமாக காணப்படுகிறது. திடீரென பனியின் தாக்கம் அதிகரித்து இருப்பது, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!