நம் ராணுவத்தின் வடக்கு மண்டலம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திர திவேதி பேசியதாவது: நம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் திடமாக உள்ளது. எல்லையில் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க முயன்றால், நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்கும். இது சமீப காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து, ஒவ்வொரு நாடும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
நம் நாட்டின் எல்லையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, துாதரக அதிகாரிகள் வாயிலாகவும், ராணுவ அதிகாரிகள் வாயிலாகவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. நம் எல்லையை பாதுகாப்பதில் முப்படைகளும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. எந்த சூழ்நிலையையும், சவாலையும் சந்திக்கும் வகையில் நம் படைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (6)
வடிவேலு பாஷையில் சொல்லனும்னா பேச்சு பேச்சதான் இருக்கணும். இப்படியே பேசிக்கிட்டே இருக்கணும்.
இதைத்தவிர இந்தியாவுக்கும் சரி சீனாவுக்கும் சரி வேறு வழியில்லை. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் இந்திய-சீன வர்த்தகம் நன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. போர் என்று வந்துவிட்டால் இரு நாடுகளுக்கும் பொருளாதாரரீதியில் அடித்தான்
ரொம்ப நாள் இது மாதிரி செய்தியே வரலைன்னு பாத்தேன்.
சத்தம் போடாமல் அறுபதுகளில் இழந்த இடங்களை மீட்டெடுத்தால் என்ன? இதனால் தூக்கம் இழப்பது ராகுல், கம்யூனிஸ்ட்களாகத்தான் இருக்கும்.
அங்கே சீனாக்காரன் குடும்பமே .... இவரு மீட்டெடுக்கப்போறாராம். முதலில் அந்த சீனாக்காரனுங்கள வெரட்டுங்கடா. அப்புறம் பார்க்கலாம் மத்தத. அதான் விஸ்வகுருவுக்கு சீனான்னு பேர் சொல்லவே பயமா இருக்கே. அப்புறம் எப்பூடி
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஆஜர் ஆறாரு..... ஏன் புதுசா தேவையற்ற ராணுவ தளவாடம் வாங்கி கமிஷன் பாக்கணுமா?