உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
கே.மணிவண்ணன், கோவையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தான், கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை எதிர்க்கின்றனர்' என்று, திருவாய் மலர்ந்திருக்கிறார், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி.
அத்துடன், 'தன் வாழ்நாள் முழுதும், தமிழ் சமுதாயத்திற்காக, அயராது பாடுபட்டவர் கருணாநிதி. எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக, ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் அவர்' என்றும்,தி.மு.க., தொண்டனை மிஞ்சும் அளவிற்கு, கூவி இருக்கிறார்.
அந்த அழகிரிக்கு சில கேள்விகள்...
* 1977 - 1987 வரை, எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவி வகித்த காலத்தில், தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றியவர் கருணாநிதி. ஆனால், அந்தப் போராட்டங்களில் ஒன்று கூட மக்களுக்கானதல்ல; இது, எம்.ஜி.ஆருக்கு எதிராக, கருணாநிதி பின்பற்றியகாழ்ப்புணர்ச்சியா, இல்லையா?

* 1969-ல் அண்ணாதுரை மறைந்த போது, எம்.ஜி.ஆர்., தயவால் முதல்வரானார் கருணாநிதி.
பின், 1972ல் நடந்த சட்டசபை தேர்தலில், பட்டி தொட்டி எல்லாம் பிரசாரம் செய்து, அவரை மீண்டும் முதல்வராக்கினார் எம்.ஜி.ஆர்., அழகிரி சொல்வது போல எழுத்து மற்றும் பேச்சாற்றலால் முதல்வரானார் என்றால், 1977 -1987 வரை கருணாநிதி ஏன் முதல்வராக வில்லை?
* கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால், மக்களுக்கு என்ன பயன் என்று, விஞ்ஞானி அழகிரி கூறுவாரா?
மொத்தத்தில், தி.மு.க.,வினரை விட, ஸ்டாலினுக்கு அதிகமாக துதிபாடுகிறார் அழகிரி. ஒரு வேளை, காங்கிரஸ் இவரை கழற்றி விட்டால், தி.மு.க.,வில் வாரிய பதவிக்குதுண்டு போடுகிறாரோ என்னவோ... இவர் தன் அறிக்கை வாயிலாக, தி.மு.க.,வின், 'சொம்பு துாக்கி' என்று நிரூபித்துள்ளார்; வாழ்க... வளர்க... அழகிரியின் தொண்டு!
வாசகர் கருத்து (35)
அரசியல் காழ்ப்புணர்ச்சியா? ஒன்றுக்கும் உதவாத பேனாவுக்கு சிலை வைப்பதை எதிர்ப்பவர்கள் எல்லோரும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கவில்லை. சொல்லப்போனால், அவர்களில் பலருக்கு அரசியல் பிடிக்காது. ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், இது ஒரு வீண் செலவு என்பதால்தான். அதை புரிந்துகொண்டு பேசு .
மக்கள் வரிப்பணத்தை செலவு செய்ய மிகக் கடுமையான எதிர்ப்பு இருக்கறதுனால உம்மணா மூஞ்சியா இருக்காரு .
தொண்டு இல்ல... துண்டு .
வாயய் மூட இயலாது .அப்படி அமைஞ்சிருச்சி
அருவருப்பான அரசியல்வாதி ....