Load Image
Advertisement

ரூ.18 ஆயிரம் கோடி கடன் வாங்கும் முயற்சியில் ஏர் இந்தியா நிறுவனம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: 'ஏர் இந்தியா' நிறுவனம்,'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா' வங்கிகளில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:'டாடா' குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா,அதன் கடன்களுக்கான மறுநிதிக்காக, குறுகிய கால அளவிலான கடனை வங்கிகளில் பெற திட்டமிட்டுள்ளது. இந்த கடன்கள், ஓராண்டு காலத்துக்கானதாகும்.
ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும் நிலையில், இக்கடன் வாங்கும் ஏற்பாட்டை மேலும் ஒரு ஆண்டிற்கு தொடர,
இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Latest Tamil News
'ஏர் ஏசியா, விஸ்தாரா' உள்ளிட்ட அதன் பல்வேறு விமானப் பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது. புதிய விமானங்களில் முதலீடு, ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பித்தல், மற்றும் அதன் நெட்வொர்க்கை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டு வருகிறது.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், நீண்டகால கடன்களையும் பெற்று, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்நிறுவனம் விரும்புவதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, டாடா சன்ஸ் நிறுவனம், எஸ்.பி.ஐ.,யிடம் 10 ஆயிரம் கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடாவிடம் 5 ஆயிரம் கோடி ரூபாயும் கடனாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    டாடாவுக்கே பண முடை கடன் தேவைப்படுது இந்த லட்சணத்தில் நாமெல்லாம் எந்த மூலைக்கு ..???

  • duruvasar - indraprastham,இந்தியா

    டாடா குழுமமமா அப்படியென்றால் பரவாயில்லை ஏனனில் அவர்கள் சிறு குறு சில்லறை வ்யாபாரிகள்தான் .அதானி , அம்பானி போல கார்பொரேட் இல்லை .

  • அப்புசாமி -

    வாங்க என்னோட வூட்டை விக்கிறேன். என்னது? வாங்கறதுக்கு காசில்லையா? பரவாயில்லை. அதுக்கு நானே கடன் தரேன்.

    • duruvasar - indraprastham

      பெரியவரே அப்படியே அந்த 15 லட்சதையும் கொடுக்கீறீங்களா? சிதம்பரம் முதலில் சீட் கெடச்சி, ரீ கவுண்டில் ஜெய்ச்சி மந்திரி ஆகட்டும். அப்பறம் உங்க கச்சேரியை ஆரமிக்கலாம் ,

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      //அந்த 15 லட்சதையும் கொடுக்கீறீங்களா...// அட்ரஸ் மாத்தி கேக்குறீங்களே.

  • R MANIVANNAN - chennai,இந்தியா

    ஆஹா அடுத்த ஐந்தாண்டுகளில் முப்பத்தி மூன்று ஆயிரம் கோடி write off செய்யப்படும்

  • ஆரூர் ரங் -

    வங்கிகள் சிறப்பாக செயல்பட நல்ல வாடிக்கையாளர்கள் தேவை. டாடா நிறுவனம் எதுவுமே எந்த வங்கிக்கும்👌 அசல், வட்டி பாக்கி வைத்ததில்லை. இவர்களுக்கு கடன் வழங்க வங்கிதான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      ஆமாம் ஆமாம். பெரிய புள்ளி இவரு. கடனை கொடுத்துடுங்கப்பா, தேர்தல்நிதி பத்திரம் எவ்வளவு பெர்ஸெண்ட்டுன்னு இவரு சொல்லிடுவாரு. மறந்துடாதீங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement