ADVERTISEMENT
புதுடில்லி:கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரியில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து 28 ஆயிரத்து, 852 கோடி ரூபாயை, வெளியே எடுத்துள்ளனர்.
அண்மைக் காலமாக, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில், சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து, முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்துள்ளனர்.
முந்தைய மாதமான டிசம்பரில் 11 ஆயிரத்து, 119 கோடி ரூபாயையும்; நவம்பரில் 36 ஆயிரத்து, 238 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்த நிலையில், ஜனவரியில் வெளியே எடுத்துள்ளனர்.இந்திய சந்தைகள், உலக சந்தைகளைவிட குறைவான செயல்திறனைக் காண்பதால், வரும் மாதங்களில் அன்னிய முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம் என நிபுணர்கள்
கருதுகின்றனர்.இந்திய சந்தைகளிலிருந்து பங்குகளை விற்று சீனா, ஹாங்காங், தென்கொரியா ஆகிய சந்தைகளில் குறைவான விலையில் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

வாசகர் கருத்து (12)
இந்த மாவை எவ்வளவு நாள் தன ஆட்டுவீங்க?
அதற்கு பதில் உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து சமன் செய்துள்ளன. உலகப் பொருளாதார நிலை சீரடைந்து ஏற்றுமதி மீண்டும் உயர்ந்தால் மீண்டும் அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப வருவர்.
2020 ல நிர்மா ஜீ குடுத்த 20 லட்சம் கோடியை வெளியே எடுத்துட்டாங்க. இனிமே அடுத்த 20 லட்சம் கோடி ரிலீஸ் பண்ணப்புறம் வருவாங்க.
அப்போ அதானிக்கு ஒண்ணும் இல்லையா?
அதானி கைங்கரியத்தில் இன்னும் எத்தனை கோடி வெளியேறியதோ. இன்னும் எவ்வளவு கோடி வெளியேற உள்ளதோ.
இப்படி சிதற விட்டு அப்புறம் மொத்த நாட்டையும் தவணை விலையில் தாரை வார்த்துடுவார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
2014 இல் 20000 புள்ளிகளில் இருந்த பங்குச் சந்தை இப்போது 57000 ஆக உயர்ந்துள்ளது.இது அரசின் மீதுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது.