Load Image
Advertisement

ஆன்லைனில் ஸ்பாட் பைன் வசூலிக்கும் நடைமுறை... அறிமுகம்

Tamil News
ADVERTISEMENT
புதுச்சேரி : போக்குவரத்து விதிமீறல்களுக்கு, ஆன்லைன் மூலமாக உடனடியாக அபராதம் (ஸ்பாட் பைன்)வசூலிக்கும் நடைமுறை புதுச்சேரியில் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போது 'ஸ்பாட் பைன்' வசூலிக்கப்படுகிறது.

அதாவது, போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, கையால் எழுதி தந்தோ, கையடக்க கருவி மூலமாகவோ சலான் வழங்கியோ, அபராத தொகை நேரடியாக பணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நடைமுறையில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவது, போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்களிடம் பணம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல சிக்கல்கள் உள்ளன.

மேலும், தொடர்ச்சியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரிக்க முடிவதில்லை.

இ - சலான் கருவி கொள்முதல்



எனவே, பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் மயமாகி வரும் தற்போதைய சூழ்நிலையில், அதிநவீன இ - சலான் கருவி மூலமாக 'ஸ்பாட் பைன்' வசூலிக்கும் நடைமுறை புதுச்சேரியில் ஓரிரு நாட்களில் அமலுக்கு வர உள்ளது.

இதற்காக, போக்குவரத்து துறையில் 50 இ - சலான் அதிநவீன கருவிகள் வாங்கப்பட்டு, 35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வசம் இருக்கும்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு இ - சலான் கருவியை பயன்படுத்தி, போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஆன்லைன் முறையில் அபராதம் வசூலிக்க உள்ளனர்.

விதிமீறல்களுக்கு கிடுக்கிப்பிடி



அனைத்து வாகன லைசன்ஸ்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் அடங்கிய 'சாரதி' சாப்ட்வேர், அனைத்து வகையான வாகனங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய 'வாஹன்' சாப்ட்வேர் ஆகியவற்றுடனும், போக்குவரத்து துறையின் வங்கி கணக்குடனும் இ - சலான் கருவிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

போக்குவரத்து விதிகளை மீறும் நபரின் டிரைவிங் லைசன்ஸ் எண் அல்லது சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை இ - சலான் கருவியில் பதிவு செய்யும்போது, அனைத்து விபரங்களும் போக்குவரத்து துறையில் உள்ள கம்ப்யூட்டருக்கு சென்று விடும்.

இதன் மூலமாக, சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே எந்தந்த போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் செலுத்தி உள்ளார், எவ்வளவு தொகை செலுத்தி உள்ளார், தேதி, நேரம், ஓட்டி வந்த வாகன விபரம், டிரைவிங் லைசன்ஸ் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகி கொண்டே வரும்.

உதாரணமாக, ெஹல்மெட் அணியாததற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அடுத்தமுறை ஒருவழி பாதையில் சென்றதற்காக அபராதம் விதிக்கப்படும்போது, ஏற்கனவே செலுத்திய அபராதம் குறித்த விபரங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

தொடர்ச்சியாக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் விபரங்களை அறிந்து, சம்பந்தப்பட்ட நபரின் டிரைவிங் லைசன்சை சஸ்பெண்ட் செய்யவோ, ரத்து செய்யவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நடைமுறையில் விதிமீறல் விபரத்தை கையால் எழுதி தருவதால், தொடர்ச்சியான குற்றங்களை கண்டுபிடிக்க முடியாது.

மேலும், இ - சலான் நடைமுறை அமலுக்கு வரும்போது, பணமாக மட்டுமல்லாமல், அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். அதாவது, 'டெபிட்' மற்றும் 'கிரிடிட் கார்டு' மூலமாகவும், 'க்யூஆர் கோடு' ஸ்கேன் செய்தும், ஜிபே போன்ற மொபைல் ஆப் மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.

கையில் பணம் இல்லாவிட்டால், வீட்டிற்கு சென்று ஆன்லைன் முறையிலும் அபராத தொகையை செலுத்த முடியும்.

அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை எளிதாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில், இ - சலான் கருவி மூலமாக ஆன்லைனில் 'ஸ்பாட் பைன்' வசூலிக்கும் நடைமுறையை, ஓரிரு நாட்களில் அமலுக்கு கொண்டு வருவதற்கு, அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement