Load Image
Advertisement

உலகின் சிறந்த மாணவி: சென்னை சிறுமி சாதனை

Tamil News
ADVERTISEMENT
வாஷிங்டன்: உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 பேர் பங்கேற்ற உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை மாணவி, நடாஷா பெரியநாயகம், 13, சிறப்பிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டி நடக்கும்.

இந்தப் போட்டியில் தான் படிக்கும் வகுப்பைவிட, உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையான கற்கும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உள்ளவர்களுக்கு சிறப்பு இடம் வழங்கப்படும்.

இதன்படி, 2021- - 2022ம் ஆண்டுக்கான போட்டியில், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இதில், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் ஆறாம் வகுப்பு படிக்கும் நடாஷா பெரியநாயகம் என்ற மாணவி, தன் வயது மற்றும் வகுப்பைச் சேர்ந்தவர்களைவிட உயர் புத்திகூர்மை உள்ள மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்தாண்டு நடந்த போட்டியிலும், இவர் பங்கேற்று சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடாஷாவின் பெற்றோர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இந்தாண்டுக்கான போட்டியில், எட்டாம் வகுப்பில் படிக்கும் அதி புத்திசாலி மாணவர்களின் புத்திக்கூர்மையில், 90 சதவீதத்தை பெற்றுள்ளார் நடாஷா. இதன்படி, 15 ஆயிரத்து 300 பேரில், இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ௨௭ சதவீதம் பேரில் நடாஷாவும் ஒருவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.


வாசகர் கருத்து (4)

  • morlot - Paris,பிரான்ஸ்

    Congratulation, fortunately she is living at usa,to show her talents.

  • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    வாழ்த்துக்கள்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்

  • r ravichandran - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்