கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., 69 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 64 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் த.மா.கா., 58 ஆயிரம் ஓட்டுகள் பெற்று, 9,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.கடந்த மூன்று தேர்தல்களை போல, இடைத்தேர்தலிலும் 60 ஆயிரம் ஓட்டுகளை பெறுவது உறுதி என, அ.தி.மு.க., கருதுகிறது. வெற்றி பெற கூடுதலாக, 20 ஆயிரம் ஓட்டுகளை பெற்றால் போதும் என்றும் கருதுகிறது.
அதில் தனிக் கவனம் செலுத்த, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, தொகுதியில் விசைத்தறி தொழில் நலிவடையும் வகையில், மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஓட்டுகளை மொத்தமாக பெற, விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அ.தி.மு.க., தேர்தல் பணிக் குழு பேச்சு நடத்தி உள்ளது.
திருமா மீது கமல் புகார்
தி.மு.க., கூட்டணியில் கமல் இணைந்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்டபோது, 'கமல் இணைந்தது, ஓட்டு வங்கிக்கு வலுசேர்க்கும் என, நான் கருதவில்லை. நாங்கள் பேசுகிற கருத்தியலுக்கு வலுசேர்க்கும்' என கூறியுள்ளார்.
அவரது கருத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அக்கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர், தி.மு.க., மேலிடத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (7)
ஏலே அங்கே வாக்கு இருக்குறவனால மட்டும் தாம்லே அதை செய்யமுடியும். நீ கள்ளவோட்டு பார்ட்டியா? போலீஸ்கார்ஸ், இவனை பிடிச்சி வைங்க.
நீ வணங்குற கடவுளுக்கு வேற வேலையே இல்லியா? அங்கே துருக்கியில 40,000 உசிரு போயிருக்கலாம்ன்னு சொல்றாங்க. அதுக்கெல்லாம் கவலைப்படாதா ஒன்னோட சாமி. ஒன்னியே மாதிரியே சில்லறைன்னு ஆக்கிபுட்டீங்களே,
வாக்கு இலக்கு முப்பதாயிரம். களத்தில் இறக்குவது அறுபது சுவீட் பாக்ஸ். பாஜாக்கா துணையின்றி நிற்பதால் நோட்டாவை தாண்ட மாட்டோமா என்கிற பயம் கிடையாது. சுலபமாக "வாங்கி" விடுவார்கள்.
எப்படியோ - இந்துமத விரோதி இளங்கோவன் மண்ணை கவ்வவேண்டும்
எடப்பாடிக்கே இவ்வளவு ஆசை இல்லையப்பா.
சென்ற முறை காங்கிரசுக்கும், அண்ணா தி மு க விருக்கும் இடையே வெறும் 6% தான் வித்தியாசம்.இப்போ தி மு க வின் செயல்களால் மக்களிடையே தி மு க ஆதரவு சரிந்துள்ளது. அதனால்தான் அத்தனை அமைச்சர்கள், பணம், அரசு துறைகள் எல்லாம் அங்கே வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை.முறையாக தேர்தல் நடந்தால் இளங்கோ நாய்க்கர் மண்ணை கவ்வுவார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
நான் வணங்கும் கடவுளர்களை நிந்தனை செய்யும் இவனை தோற்கடிப்பது ஒவ்வொரு இந்துவின் தலையாய கடமை