காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா., மறைவு காரணமாக, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, வரும் 27ல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது.
எதிர்பார்ப்பு
தி.மு.க., கூட்டணி சார்பில், மறைந்த திருமகன் தந்தை இளங்கோவன், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வில் பழனிசாமி தரப்பிலும், பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிடப் போவதாக அறிவித்ததால், தேர்தல் களம் சூடுபிடித்தது.
ஏற்கனவே, பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று தென்னரசு மனு தாக்கல் செய்தார்.
தே.மு.தி.க., சார்பில் ஆனந்த்; நாம் தமிழர் என்ற கட்சியின் சார்பில் மேனகா; அ.ம.மு.க., சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பரிசீலனை
இது தவிர, பல 'லெட்டர் பேடு' கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். எந்த கட்சியும் சாராமல், சுயேச்சை வேட்பாளர்களாக, 53 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வகையில் நேற்று முன்தினம் வரை, 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று மட்டும், 37 பேர் மனுதாக்கல் செய்தனர். இதில், தென்னரசு உள்ளிட்ட சில வேட்பாளர்கள் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம், 108 வேட்பு மனுக்கள் தாக்கலாகி உள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை 3:00 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால், மனு தாக்கல் செய்ய, ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்த பின், ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து மட்டும் மனுக்கள் பெறப்பட்டன. இன்று காலை 11:00 மணிக்கு, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. சரியாக பூர்த்தி செய்யப்படாத வேட்பு மனுக்கள், மாற்று வேட்பாளர்கள் மனுக்கள், தள்ளுபடி செய்யப்படும்.
அதேபோல் ஒரே வேட்பாளர் நான்கு மனுக்கள் தாக்கல் செய்திருந்தால், அவர்களின் ஒரு மனு ஏற்கப்பட்டதும், மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், வரும் 10ம் தேதி மாலை 3:00 மணி வரை திரும்ப பெறலாம். அ.தி.மு.க., பன்னீர்செல்வம் வேட்பாளர், அ.ம.மு.க., வேட்பாளர் ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற உள்ளனர். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது, இறுதியாக களத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரிய வரும்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (5 + 1)
எதனை கோவில் இடிச்சாலும் தி மு க தான் வேண்டுமா ...நீங்களெல்லாம்..........இல்லை .....
ஆடீம்காக்கு வேண்டியது எல்லாம் 30,000 வோட்டு. அதுக்கு செலவு 60 சுவீட் பாக்ஸ். முன்னாள் மந்திரிங்க 30 பேரு, ஆளுக்கு ரெண்டு சுவீட் பாக்ஸ் கணக்கு. கெடைச்சிடும். பாஜாக்கா ஓரமா நின்னு விறல் சூப்பிக்கினு வேடிக்கை பாக்கலாம். அம்புட்டு தான்.
திமுக ஜெயிக்க வேண்டும்... நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு நல்லது.
ஹா ஹா ஹா .. ஆடீம்காவுக்கு சாபமா? என்னதான் தீயிலே நின்னு தவம் பண்ணாலும் பாஜாக்கா தமிழ்நாட்டில் தேறவே வாய்ப்பில்லை. போயி போர்த்திக்கிட்டு அழுங்க.
இடைத்தேர்தல் மனு தாக்கல் நிறைவு: 70க்கும் மேற்பட்டோர் வேட்புமனு (1)
அப்போ திமுகவிற்கு செலவு ரூ 680 லட்சம்???68 பேரையும் கூப்பிட்டு ஆளுக்கு ரூ 10 லட்சம் கொடுத்தால் அவர்கள் தேர்தலிலிருந்து விலகுவார்கள் இவர்களுக்கு செல்லவேண்டிய கணிசமான ஓட்டும் திமுகவிற்கு விழும் என்ற எண்ணத்தில்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
திமுக வெல்லும். வட இந்திய அரசியல்வாதிகளுக்கு அடிமை அதிமுக வேண்டாம்.