ஸ்ரீநகர் ":ஜம்மு - காஷ்மீரில், அரசு நிலங்கள் மீட்கப்படும் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏழை எளிய மக்களும், அரசியல் எதிரிகளும் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பு கட்டடங்களை புல்டோசர் வைத்து இடிப்பதை எதிர்த்து பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு
ஜம்மு - காஷ்மீரில் அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு, நிலத்தின் உரிமையை அளிக்கும் ரோஷிணி சட்டம் 2007ல் நடைமுறைக்கு வந்தது.
இதன்படி, அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்களுக்கே நிலம் சொந்தமானது.
விவசாயம் அல்லாத நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடமே குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன. இந்த சட்டத்தை ரத்து செய்து ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம் 2020ல் உத்தரவிட்டது.
இந்நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் கடந்த மாதம் துவங்கியது.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படுவதுடன், இவற்றில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை புல்டோசர் வைத்து இடிக்கப்படுகின்றன.
இந்தப் பணி ஜம்மு - காஷ்மீரின் 20 மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
குற்றச்சாட்டு
இதையடுத்து, மத்திய அரசு மக்களை வீடு அற்றவர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இது பற்றி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கூறுகையில், ''கட்டடங்களை இடிக்கும் பணியால், காஷ்மீரின் நிலை பாலஸ்தீனத்தை விட மோசமாகி வருகிறது. இந்த அரசு ஜம்மு - காஷ்மீரை ஆப்கானிஸ்தானை போல மாற்றி வருகிறது,'' என்றார்.
இந்த நடவடிக்கையால், 90 - 95 சதவீத முஸ்லிம் சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜத் லோன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர்.
ஆனால், 'நிலத்தை அபகரித்துள்ள அரசியல் கட்சியினர், அதிகாரிகள், தொழிலதிபர்களிடம் இருந்து தான் ஆக்கிரமிப்பு மீட்கப்படும்.
'இதில் ஏழை மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்' என, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
வாசகர் கருத்து (4)
90.00 முஸ்லிம்கள் பயனடையும் வகையில் அரசு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இலவசம் என்றால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆகவே இது சரியான நடவடிக்கைதான். நீதிமன்றமே சொன்ன பின் வேறு என்ன இருக்கிறது.
Nadavadikkai sarithaan. Arasu nilam yenraal aattaiyai poduveerkalaa
இந்த நடவடிக்கையால், 90 - 95 சதவீத முஸ்லிம் சமூகத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாக,...அப்ப ஹிந்து பாதிக்கபட்டக்க நியாயம் அதே தானே ....அடித்து நொறுக்குங்க
எதுக்கும் ஒத்து வர மட்டான்