ADVERTISEMENT
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் விரைவில் தனது ஃபிளாக்ஷிப் அபாச்சி (TVSApacheRTR310) இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய இருசக்கர வாகனச்சந்தையில் புகழ்பெற்ற நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஸ்கூட்டர்கள் முதல் ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரை கை வைக்காத தயாரிப்புகளே இல்லை. அதுமட்டுமல்லாமல், தற்போது எலெக்ட்ரிக் பிரிவிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதுபோக, டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் பிஎம்டபுள்யூ நிறுவனத்துடன் இணைந்து G310 R மாடலை வெளியிட்டது. தற்போது அந்த வரிசையில் டிவிஎஸ் நிறுவனம் முற்றிலும் தனது ஃபிளாஷிப் மாடலான டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 மாடலை விரைவில் இந்திய சந்தையில் களமிறக்கவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அபாச்சி ஆர்டிஆர்310 பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் G310R மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது என கூறப்படுகிறது. புதிய RTR 310 மாடலில் அபாச்சி RR 310 பைக்கில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அபாச்சி ஆர்ஆர் 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட ஜி310 ஆர்ஆர் பைக்கை ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
புதிய ஆர்டிஆர்310 மாடல் நேக்டு ரக தோற்றத்தில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், பார்ப்பதற்கு ரக்கர்ட் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதில் கிடைமட்டமாக பொருத்தப்பட்ட TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன், ப்ளூடூத் என பல்வேறு ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது.
இதன் என்ஜினை பொறுத்தவரை, 312சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பிஎஸ் பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், மற்றும் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், வழங்கப்பட்டுள்ளது. அதுபோக, வழக்கமான ஆர்ஆர் 310 மாடலில் உள்ளதை போலவே அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை அம்சங்களாக வழங்கப்படலாம்.
இந்திய சந்தையில் புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 விலை ரூ. 2,50,000 (எக்ஸ்-ஷோரூம் விலை) என நிர்ணயம் செய்யப்படலாம். புதிய டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 310 மாடல், ஆர்.ஆர்310 மாடலை விட ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!