ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்குவங்க மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
இக்கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்கட்சியான பா.ஜ., மேற்கவங்க மாநிலத்தை இரண்டாக பிரித்து வடக்கு வங்கம் என்ற தனி மாநிலத்தை உருவக்க கோரும் தீர்மானத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆளும் திரிணாமுல் காங். கட்சி இந்த தீர்மானத்தை ஒரு மனதாக எதிர்க்க முடிவு செய்துள்ளது.
இதையடுத்து நாளை துவங்க உள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை கொண்டுவர உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் எதிர்கட்சிகளின் தீர்மானம் நிறைவேற கூடாது எனவும் மாநிலத்தை இரண்டாக பிரிக்க முயற்சிக்கும் எதிர்கட்சிகளின் தீர்மானத்தை முறியடிப்பது எனவும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனதிரிணாமுல் காங், எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சவுவான்தேப் சாட்டேபாத்யாயா கூறினார்.
இக்கூட்டத்தொடரின் போது பிரதான எதிர்கட்சியான பா.ஜ., மேற்கவங்க மாநிலத்தை இரண்டாக பிரித்து வடக்கு வங்கம் என்ற தனி மாநிலத்தை உருவக்க கோரும் தீர்மானத்தை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆளும் திரிணாமுல் காங். கட்சி இந்த தீர்மானத்தை ஒரு மனதாக எதிர்க்க முடிவு செய்துள்ளது.

வாசகர் கருத்து (3)
பாகிஸ்தான் ரெண்டாக பிரிந்த பின் பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் முன்னேறியது ..
காஷ்மீரை பிரித்த பின்னரே வன்முறை குறைந்தது. வங்காளமும் அப்படியே பிரிக்கப்பட வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மம்தாவை ரெண்டா பிரிச்சுடுங்க ....