Load Image
Advertisement

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: அண்ணாமலை விமர்சனம்


சென்னை: தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Latest Tamil News


இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கிறது.

Latest Tamil News

நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி என்னவானது?. 22% ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக பா.ஜ., துணை நிற்கும்.

நெல் விவசாயிகளுக்கு 52.03 கோடி செலவில் தார்ப்பாய்கள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வேளாண் அமைச்சர் நிறைவேற்றினாரா?. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (19)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    சொன்னதை செய்யாததை முக்கியமில்லை. சொல்லாததை (கொள்ளையடிப்போம்) திறம்பட செய்வதுதான் முக்கியம்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நீங்களும் கரடியாக கத்துகிறீர்கள். மக்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு. அவர்களுக்கு அலுமினிய கொலுசு வேண்டும். தமிழகம் கடனில் மூழ்கினால் இவர்களுக்கு என்ன? திராவிட மாடல் அரசோ முழுச்செவிடு. பணம் கொடுத்ததால் மக்கள் வோட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றி உங்களைத்தவிர, உங்கள் காட்சியைத்தவிர வேறு யார் பேசுகிறார்கள்? வேண்டாத வேலை செய்து மக்களை திசைதிருப்புவதை ஊடகங்கள் வெற்றிகரமாகச்செய்கின்றன.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தேர்தல் நேரத்தில் சொன்ன பொய்களை வாக்குறுதிகள் என்று சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  • srinivasan Ramesh -

    Current Issueஓட்டே, உன் விலை என்ன?போகிற போக்கைப் பார்த்தால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டால் இப்படிப்பட்ட காட்சிகளைக் காணவும் வாய்ப்புண்டு. காட்சி - 1மக்கள்: என்ன இது? ஆயிரம் குடுக்கறீங்க? பொதுத் தேர்தல்லேயே ஓட்டுக்கு அஞ்சாயிரம் வாங்கினோம். இப்ப ஒரு தொகுதியிலேதானே தேர்தல் நடக்குது? ஒரு ஓட்டுக்கு இருபதாயிரம்னு அஞ்சு ஓட்டுக்கு ஒரு லட்சம் குடுங்க. தி.மு.க.: பொதுத் தேர்தல்லே ஏராளமா செலவு பண்ணிட்டோம்ணே. விட்ட பணத்தைப் பிடிக்கவே முடியலை. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. பார்லிமென்ட் தேர்தல்லே சேர்த்துத் தரோம். பெண்: மாசம் ஆயிரம் ரூபா தரோம்னீங்க. ஒன்றரை வருஷம் ஆச்சு. பைசா வரலை. இதுக்கு மேலே என்ன அட்ஜஸ்ட் பண்றது? ஏதோ எங்க அதிர்ஷ்டம், இடைத்தேர்தல் வந்திருக்குது. இல்லேன்னா இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பீங்களா? அஞ்சு ஓட்டுக்கு 90 ஆயிரமாவது குடுங்க. தி.மு.க.: தளபதி சொன்னா சொன்னதுதாம்மா. என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா குடுப்பாரு. கொரோனா நிதி 4000 குடுத்தோம்லே? அத்தோட இந்த ஆயிரமும் சேர்த்துக்குங்க. ஆட்சியைப் பிடிச்சுட்டு கஷ்டப்படறோம்மா. ஜாஸ்தி கேக்காதீங்க. மக்கள்: உங்களுக்கு என்ன பணத்துக்குப் பஞ்சமா? உலக பேங்க்லே வருஷத்துக்கு லட்சம் கோடி கடன் வாங்கறீங்க இல்லே? 81 கோடியிலே பேனா சிலை வேறே வெக்கப் போறீங்க. அதுலே நாப்பது கோடியாவது மிஞ்சுமே. ஒரு ஓட்டுக்கு 15000 - க்கு கம்மி வாங்க மாட்டோம். தி.மு.க.: மத்தியிலே ஏழெட்டு மந்திரி பதவி கிடைச்சிருந்தா நீங்க கேக்கறது நியாயம். இப்ப எப்படி அவ்வளவு தர முடியும்? இன்னும் பல வீட்டுக்குப் போகணும். தேர்தல் கமிஷன் ஆளுங்க பார்த்தா இதையும் தடுத்துடுவானுங்க. சீக்கிரம் ஆளுக்கு 1500 வாங்கிக்குங்க. பெண்: கட்டாதுங்க. டாஸ்மாக் கமிஷனே எக்கச் சக்கமா வருதுன்னு படிச்சேனே. நீங்க நியாயமா குடுத்தா உங்க கிட்டே மட்டும் வாங்குவோம். இல்லைன்னா அ.தி.மு.க. கிட்டேயும் வாங்கி, யார் அதிகம் தராங்களோ அவங்களுக்குத்தான் ஓட்டு போடுவோம். அதான் வழக்கம். அஞ்சு ஓட்டுக்கு அம்பதாயிரமாவது குடுங்க. தி.மு.க.: அ.தி.மு.க. உடைஞ்சு போச்சும்மா. நாங்க இப்ப பணம் குடுக்காமலே ஜெயிக்க முடியும். இருந்தாலும் முறைன்னு ஒண்ணு இருக்குதில்லே? ஒரு ஓட்டுக்கு 2000 தரோம். சந்தோஷமா வாங்கிக்குங்க. மக்கள்: ரெண்டாயிரத்திலே எப்படி எங்க கஷ்டம் தீரும்? இதைவிட்டா 2024-லேதான் அடுத்த தேர்தல். அது வரைக்கும் எங்க கதி என்ன? முட்டை வாங்கறதிலே எவ்வளவு சம்பாதிக்கிறீங்க? எட்டாயிரம் குடுக்கக் கூட மூக்காலே அழுவறீங்களே? தி.மு.க.: ஆளுநர் பண்ற அடாவடியாலே துணை வேந்தரைக் கூட நியமிக்க முடியலை. அதனாலே எவ்வளவு நஷ்டம் தெரியுமா? ஓட்டுக்கு 3000 தரோம்ணே. இத்தனைக்கும் நாங்க நிக்கலை. கூட்டணிக் கட்சிக்குத்தான் ஓட்டு கேக்கறோம். பெண்: ரெண்டு கட்சியும் சேர்ந்து டெல்லியிலே போட்ட ஆட்டத்தை மறக்க முடியுமா? சீக்கிரம் ஓட்டுக்கு ஏழாயிரம் எடுங்க. வீட்டுலே ஆயிரம் வேலை இருக்குது. தி.மு.க.: நீங்க ஏம்மா வேலை செய்யணும்? எந்த வேலையா இருந்தாலும் கட்சிக்காரங்க பைசா வாங்காம செய்வாங்க. தேர்தல் முடியற வரைக்கும் உங்களுக்கு ரெஸ்ட். பிடிங்க ஆளுக்கு 3500/-. மக்கள்: முடியாதுங்க. கலெக்ஷன், கமிஷன் பத்தி தினமும் நியூஸ் வருது. 6000-க்கு கம்மி பைசா வாங்க மாட்டோம். எங்க சுயமரியாதை பாதிக்குது. தி.மு.க.: எங்க கஷ்டம் தெரியாம பேசறீங்க. இப்ப நீட் வேற வந்து, கோடிக்கணக்கிலே நஷ்டமா யிடுச்சு. சேது திட்டத்துக்கு சான்ஸ் கிடைச்சா, நீங்க கேக்கறதுக்கு மேலேயே குடுப்போம். பாவிங்க, அதுக்கும் வழிவிடாம கழுத்தறுக்கறாங்க. ஓட்டுக்கு நாலாயிரம் தரோம். பெண்: பக்கத்து தெருவிலே அஞ்சாயிரம் குடுத்துட்டு, எங்களை நாலாயிரத்துக்கு ஏமாத்தப் பாக்கறீங்களா? இதுதான் சமூக நீதியா? தி.மு.க.: தினமும் பஸ்லே ஃப்ரீயாத்தானே போறீங்க? அதுவும் எங்க பணம்தாம்மா. இப்ப நிதிநிலை சரியில்லை. அடியாளுங்களுக்கு பணம் குடுக்கக் கூட வசதி இல்லாம, தொண்டர்களை அமைச்சர்களே அடிக்கிறாங்கன்னா பாத்துக்குங்க. அவ்வளவு கஷ்டம். 4500 பிடிங்க. மக்கள்: முடியாதுங்க. மின் கட்டணத்தை ஏத்திட்டீங்க. சொத்துவரி ஏறிடுச்சு. இது மட்டும்தான் ஏறலை. பொங்கலுக்கு கூட ஆயிரம்தான் வந்தது. தமிழனே தமிழனை ஏமாத்தினா எப்படி? அஞ்சாயிரம்தான். தி.மு.க.: சரி, அஞ்சாயிரமே தரோம். ஆனா ஒண்ணு...! இந்த விழிப்புணர்வுக்குக் காரணமே பெரியாரும், கலைஞரும்தான். அந்த நன்றியை மறக்காம, காலையிலேயே போய் ஓட்டு போட்டுருங்க

  • பிரபு - மதுரை,இந்தியா

    85% வாக்குறுதியை நிறைவேத்தியாச்சுன்னு திமுக சொல்லுறாங்க. அதை வேணும்னா சரியான்னு செக் பண்ணுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up