அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?: ராகுல் கேள்வி
புதுடில்லி: அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?. மக்கள் அதனை தெரிய விரும்புகின்றனர் என காங்., எம்.பி ராகுல் லோக்சபாவில் பேசினார்.

பார்லிமென்ட் லோக்சபாவில் காங்., எம்.பி ராகுல் பேசியதாவது: தனது ஒற்றுமை பயணத்தின் போது பெண்கள், குழந்தைகள், முதியவர்களிடம் பேசினேன். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினர். அக்னிவீர் திட்டத்தால் வீரர்கள் அஞ்சுக்கின்றனர். ராணுவத்தால் அக்னிவீர் கொண்டுவரப்பட்டதாக நான் நினைக்கவில்லை.
விலையேற்றம், விவசாய பாதிப்பு நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஒற்றுமை பயணத்தில் மக்களின் குரல்களை கேட்டோம். நாடு முழுவதும் அதானி விவகாரம் பேசப்படுகிறது. ஜனாதிபதி உரையில் வேலைவாய்பின்மை என்ற வார்தையே
இல்லை.
அனைத்து தொழில்களிலும் அதானி புகுந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குஜராத்தில் மோடி முதல்வராக இருக்கும் காலத்தில் இருந்தே அதானிக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்து வருகிறார்.

பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு தான் அதானி அதிகமாக வளர்ச்சி அடைந்தார். உலக பணக்கார பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அதானி வந்தார். 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் இருந்து, அவரது சொத்து மதிப்பு 140 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து உயர்ந்தது.
அதானிக்காக சட்டம் வளைக்கப்பட்டுள்ளது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?. மக்கள் அதனை தெரிய விரும்புகின்றனர். அனைத்து வணிகத்திலும் அதானி வெற்றி காண்பது குறித்து மக்கள் வியப்பு தெரிவித்தனர். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (65)
விரைவில் அந்த சீன ஒப்பந்தத்தை வெளியிட உள்ளதாக தகவல் வருகிறது. அப்படி வெளியிட்டால் வின்சியின் எம்பி பதவி கூட பனாலாகலாம்.
காங்கரஸ் அகராதியிலேயே திரமைய்ய அற்ற தலமையய் சமீபகாலமாக சந்தித்து கொண்டிருக்கிறது. கட்சியும் தேய்ந்து கழுதை கட்டெறும்பு ஆண கதை ஆனது அதன் துரதிஷ்டமாகி விட்டது
அதானிக்காக சட்டம் வளைக்கப்பட்டுள்ளது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? - சட்டங்கள் வளைக்கப்பட்டதா, இல்லையா? பதில் சொல்லாமல் சங்கிகள் சர்க்கஸ் பண்றதை பாக்க சூப்பரா இருக்கு.
மோடிக்கும் மோசடிக்கும் தொடர்பு இருக்குமா என்பதுதான் மக்களின் மில்லியன் டாலர் கேள்வி .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கடன் வாங்கி ஓடிப்போனவர்களுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமே கிடையாது.