Load Image
Advertisement

அதானிக்கு எஸ்.பி.ஐ., கொடுத்த கடன் நிர்வகிக்கக் கூடியதே: கிரெடிட்சைட்ஸ் அறிக்கை

Tamil News
ADVERTISEMENT
அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள மொத்தக் கடன் ரூ.27,000 கோடி என்பது நிகரக் கடன்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு மற்றும் சொத்துக்களுக்கு ஈடாக தான் கடன் தரப்பட்டுள்ளது, பங்குகளுக்காக கடன் தரப்படவில்லை என்பதால், அவை நிர்வகிக்கக் கூடிய அளவிலேயே இருக்கிறது என கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை உலக முதலீட்டாளர்களை அச்சத்திற்குள்ளாக்கியது. அதானி குழுமம் கணக்குகளில் மோசடி செய்ததாகவும், பங்கு விலையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாகவும் கூறியது. அடுத்த சில நாட்களில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பில் 10 ஆயிரம் கோடி டாலரை இழந்தது. இதனையடுத்து அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், அதில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது கவனம் திரும்பியது. பொதுத் துறை வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சால் நேஷனல் வங்கி உள்ளிட்டவை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துள்ளன. எல்.ஐ.சி., நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் இவற்றின் பங்குகளும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தன.

எனவே, இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு என்ற வதந்தி பரப்பப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டு தெளிவுப்படுத்தி வருகின்றன. டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில், அதானி குழுமத்திற்கு எஸ்.பி.ஐ., தந்துள்ள கடன், மொத்த கடனில் 0.88 சதவீதம் அல்லது ரூ.27,000 கோடி. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை பணமாக்கக் கூடிய சொத்துக்களுக்கு ஈடாக தரப்பட்டவை. பங்குகளுக்கு ஈடாக கடன்கள் வழங்கப்படவில்லை என ஆர்.பி.ஐ.,யிடம் தெரிவித்துள்ளது.
Latest Tamil News இந்நிலையில் கடன் ஆய்வு நிறுவனமான கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசமான கடன்களுக்காக எஸ்.பி.ஐ., ஒதுக்கியுள்ள இருப்பு மற்றும் ப்ரீ புரொவிஷன் லாபம் உருவாக்கத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்பிஐ நன்கு நிர்வகிக்கக்கூடிய அளவிலேயே அதானிக்கு கடன் தந்துள்ளது. ரூ.27,000 கோடி கடன் என்பது 2023ன் 9 மாத லாபத்தில் 34 சதவீதத்திற்குச் சமம். பெரும்பாலான கடன்கள் முடிக்கப்பட்ட மற்றும் பணம் உருவாக்கும் சொத்துக்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டுமானத்தில் இருக்கும் திட்டங்கள். வங்கி சில நிதியில்லாத திட்டங்களுக்கும் கடன் கொடுத்துள்ளது. ஆனால் அந்தக் கடன்களுக்கு வேறு வங்கியின் உத்தரவாதங்கள் உள்ளன. பங்கு கையகப்படுத்துதல் நடவடிக்கைகளுடன் எந்த கடனும் தொடர்புடையது அல்ல. என கூறியுள்ளனர்.

கடந்த வாரம், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, அதானி குழுமம் கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வந்துள்ளது. அதானி குழும திட்டங்களுக்கு உறுதியான சொத்துக்கள் மற்றும் போதுமான பணப்புழக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கடன் வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.


வாசகர் கருத்து (28)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    இவ்வளவு நாளா என்னபண்ணி இப்போ இந்த பதிலை கண்டுபுடிசீங்க ? முதலில் மறுக்கவில்லை, இப்போது பதில் வருது, ஒன்னும் சரியா பாடலையே

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    Global banks are ramping up their scrutiny of the group following the Hindenburg report. Citigroup Inc.'s wealth arm has stopped accepting Adani securities as collateral for margin loans, following a similar move by Credit Suisse Group AG.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    முதலில் நிதி திரட்டுவதில் பல நிறுவனங்கள் கோல்மாலில் ஈடுபடுவது இந்தியாவில் தொன்று தொட்டு வரும் மரபு. பங்குச்சந்தைக்கு தயார் செய்யும் பொழுதுதான் பழைய குப்பைகளை புதைத்து புதிய நிறுவனம் நேர்மையாளர் போல மின்னும். கட்டுமரத்தின் முக்கிய நிறுவன லீலைகள் முதற்கொண்டு டாட்டா வரை இது போலத்தான். கொலை டீவியில் யார் யார் பங்குதாரர், டைரக்டர் என்று சரிபார்த்தால் இவர்களின் லீலைகள் புரியும்.

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      நீங்க அதானியை பாராட்டுறீங்களா இல்லை கழுவி ஊத்துறீங்களா ?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    கடன் கொடுத்தவன் கடனை திருப்பித் தருவானான்னு கணக்கு கேட்டா, இந்த கடன்காரன், கடன் கொடுத்த எஸ்பிஐ க்கு இந்த பணம் ஒன்னும் பெருசில்லே, சமாளிச்சுக்குவாங்கன்னு அறிக்கை தாரான். தக்காளி எங்கேருந்துடா கெளம்பி வந்திருக்கீங்க. ஏற்கனவே Yes Bank ஊழலை எஸ்பிஐ தலையிலே கட்டி விட்டீங்க. நல்லா வருவீங்கடா நீங்க.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    போறான் வாரான் தோட்டத்திலே ஒருத்தன் வெச்சான் கத்தரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி கடுதாசு போட்டான் வெள்ளைக்காரன். அதானிக்கு கியாரண்டி கொடுக்குறவன் கடன் கொடுத்தவன் கிடையாது. கடன் கொடுத்த எஸ்பிஐ வாயை மூடிக்கிட்டு இருக்க சொல்லி உத்தரவு. இந்த கியாரண்டி தாறவனும் கடன் திருப்பி தருவார் அதானின்னு சொல்லல்லே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement