Load Image
Advertisement

நீதிபதி விக்டோரியாவுக்கு ‛விக்டரி:பதவியேற்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவியேற்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.


சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி உள்ளிட்ட 5 பேர் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வைகை வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

Latest Tamil News
மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‛நீதிபதியை நியமிக்கும் போது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களுக்கு பரிந்துரை அளித்துள்ளது. மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்' எனக் கேள்வி எழுப்பினர்.


நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில், ‛நானே மாணவனாக இருந்தபோது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன்' எனக் கூறினார். விசாரணையின் முடிவில் விக்டோரியா கவுரி பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

பதவியேற்பு
Latest Tamil News
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகிய 5 பேரும் இன்று (பிப்.,7) பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.வாசகர் கருத்து (31)

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கட்சி அடிப்படையில் நீதித்துறையில் நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று தீகவினர் கொடி பிடிப்தைப்பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நிலவரப்படி காங்கிரஸ் சாசில் மூழ்கி முத்தெடுத்த செக்குலர் நீதிபதிகள்தான் அதிகம். அது இனி மாறும் என்று எதிர்பார்க்கலாம்... தீம்காவுக்கு சுண்ணாம்பு தடவ ஏற்பாடு நடப்பதாக சொல்கிறார்கள்...

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  இவர் பதவியேற்பதில் என்ன குற்றம் கண்டனர் கார்பொரேட் குடும்பத்தின் பைம்புகள் ?

 • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

  ப சி குடும்பம், கருணா குடும்பம், சோனியா போலி காந்தி குடும்பம் இது வரை நுற்றுக்கனக்கக்கான, ஜமீன்கள் பெற்று சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்து வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பது இதுவரை தேர்ந்து எடுக்கப்பட்ட ஸ்கேம் காங்கரஸ், உண்டியல் கம்யூனிஸ்ட், சோரியான் அடிமைகள் மற்றும் மதம் மாறினாலும் இந்துப்பெயரில் இருக்கும் கிரிப்டோகல் தான் கரணம், அதனால் தான் இப்போது கதறுகிறார்கள்.

 • Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா

  போலீ மதவாத தேச துரோகே கலிடமிருந்து பாரதமாதா காப்பாடினால். ஜெய் ஹிந்த்.

 • Seitheee - San Jose,யூ.எஸ்.ஏ

  ஒரு ராஜ்ய சபா எம்பீ கோவிலை இடித்தது பற்றி பேசும்போது அவருக்கு எதிராக நக்கி கொண்டு காசு வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சி பேசாதபோது, ( மக்களின் பிரதிநிதி எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் தானே?) ஒரு நீதிபதி கட்சி சேர்ந்து இருபது ஒன்றும் தப்பில்லை. நீதிபதிகள் கட்சி சார்பு இர்ருக்கக்கூடது என்பது ஒன்றும் விதி இல்லையே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்