கடலில் பேனா நினைவுச் சின்னம்: கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி

மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில், அவரது நினைவிடம் அருகே, 81 கோடி ரூபாயில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கியது.
கருத்துக் கேட்பு கூட்டம்
கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதி என்பதாலும், கடலில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடும் எதிர்ப்பு எழுந்ததாலும், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில், ஜன.,31ல் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற மீனவர் சங்கங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பா.ஜ., - நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கடலில் கட்டுமானங்களை மேற்கொண்டால், கடல் ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது.
கடல் அரிப்பு, கடல் உள்வாங்கும் ஆபத்து ஏற்படும் என, பலரும் கருத்து தெரிவித்தனர்.
'பேனா நினைவுச் சின்னம் அமைத்தால், அதை உடைப்பேன்' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனா நினைவுச் சின்னம் அமைக்க எழுந்த கடும் எதிர்ப்பால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி உள்ளனர்.
'ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் மட்டும் முதல்வர், அமைச்சரிடம் வருகிறீர்கள். ஸ்டாலினின் திட்டமான பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு வருகிறது; நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். கருத்து கேட்பு கூட்டத்திற்கு கூட செல்லவில்லை.
'எதிர்க்கட்சிகளிடம், தி.மு.க., மட்டுமே போராட வேண்டியுள்ளது. அண்ணாமலை, சீமான் அனைவருக்கும், தி.மு.க.,வினர் மட்டுமே பதிலளிக்க வேண்டியுள்ளது. பேனா நினைவுச் சின்னத்திற்கு ஆதரவாக, உடனே அறிக்கை விடுங்கள்' என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
முக்கிய அமைச்சர்களும், கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளனர்.
கடும் கோபம்
அதைத் தொடர்ந்தே, 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்க்கிறார்கள்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.
'எதிர்ப்பை பொருட்படுத்த வேண்டாம்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ; 'பேனா நினைவுச் சின்னம் அவசியம்' என, வி.சி., தலைவர் திருமாவளவனும் கருத்து தெரிவித்தனர்.
ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள், பேனா நினைவுச் சின்னத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காததால், தி.மு.க., தலைமை கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (42)
லக்ஷ கணக்கான கொள்ளை அடித்த பணத்தில், அண்ணா அறிவாலயத்தில் வையுங்களேன் . யார் கேட்க போகிறார்கள்
நட்டு பணத்தில் பொது இடத்தில் வைக்கவேண்டாம்.
திமுக ஆட்சி அமைப்பது கடினம் என்று தெரிந்து தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.எப்படியோ ஆட்சிக்கும் வந்து விட்டனர். முதல் ஆர்டரே நீட் எதிர்ப்பு, டாஸ்மாக் மூடல், என்றெல்லாம் கூறிவிட்டு,,, எங்கே மக்கள் அதையெல்லாம் கேட்டு விடுவார்களோ என்ற பயத்தில் தொடங்கியது தான் - கவர்னர் எதிர்ப்பு, பல தொண்டர்கள் மூலம் தரம் குறைந்த மேடைப் பேச்சு, உதயநிதிக்கு மந்திரி பதவி, கடலில் பேனா, இத்தியாதி இத்தியாதி. தினம் தினம் ஒரு தொடர்கதை. ஆனால் மக்கள் உஷாராகி விட்டார்கள். சுமார் பதினென்று மீடியாக்கள் திமுக விற்குத் துணையாக இருந்தாலும் மக்கள் அவர்கள் நாடகத்தை நம்பத் தயாரில்லை, இது போல் இனி தினம் தினம் ஒவ்வொரு விதமான திசை திருப்பும் நாடகம் தொடரும்.
பேனாவை மேலாக வைத்திருப்பதை மாற்றி கீழாக திருப்பி வைக்கலாம்.அதுவும் பேனா சிலையை தங்கள் சொந்த இடத்தில்,தங்களின் சொந்தப் பணத்தில் ,கட்சிப் பணத்தில் வைத்தால் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் ,யாருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை .இப்படிச் செய்ய வாரிசுக்கு துணிவு இருக்கா...???
பேனாவை கீழாக திருப்பி வைத்தால் (நிப் ) பேனா முடிஞ்சிரும். அவங்க எதையும் பகுத்தறிஞ்சு தான் செய்வாங்க. உலகத்திலையே பேனாவுக்கு சிலை வைச்ச பெருமையை நம்ம திராவிட மாடல் தட்டிகிட்டு போவதாய் நினைச்சா நெகிழ்சியா இருக்கு.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வங்க கடலில் மிக வேகமாக அலை வீசும், கட்டுமானம் , படகு போக்குவரத்து சிறப்பாக அமைய வாய்ப்பு இல்லை . கருணாநிதி பெயரில் வேண்டுமானால் ஒரு சட்ட கல்லூரி , ஒரு சினிமா டைரெக்ஷன் கல்லூரி , மிகப்பெரிய பூங்கா அமைப்பது நலம்... கடலில் பேணா கட்டி ஒரு சில ஆண்டுகலில் சேதாரம் அடைந்தாள் பராமரிப்பு இன்றி மிக அசிங்கமாக இருக்க வாய்ப்பு உள்ளது .