Load Image
Advertisement

சின்னம் ஒதுக்க கோரும் விண்ணப்பம்: தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்

ஈரோடு: இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்க கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
Latest Tamil News

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், தென்னரசை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். இதற்கான கடிதங்களை, தமிழ்மகன் உசேன் நேற்று டில்லி சென்று, தேர்தல் கமிஷனிடம் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷன் சார்பு செயலர் மனிஷ்குமார், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
Latest Tamil News
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அ.தி.மு.க., தொடர்பான அனைத்து அலுவலக தொடர்புக்கும், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது, இடைத்தேர்தலுக்கு மட்டும் பொருந்தும்.

இது தொடர்பாக, தமிழ்மகன் உசேன் நேற்று கடிதம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., வேட்பாளரின் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில், அவர் கையெழுத்திட்டு பரிந்துரை செய்வார். அதன்மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (5)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அவருக்குள்ள அதிகாரத்தை வைத்து திராவிஷ மாடல் அரசை கலைக்கமுடியுமா?

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Useless slave. We did not know who he was before the election to the post by OPS AND EPS. He could not resist EPS,SHAUGAM ,MUNUSAMY,PONNIAN AND jayakumar who enjoyed all luxuries and who prostrate before Sasikala and Dinakaran. Egoistic EPSmust she'd his egoism and consult OPS for the victory of SIADMK.curtail loose talk by jayakumar,shanmugam and ponnaiyan

    • Kadaparai Mani - chennai,இந்தியா

      பன்னீர் செல்வம் சசிகலா திமுகவுடன் உறவு வைத்து உள்ளார். நீங்கள் அதிமுக பற்றி கவலை பட தேவைக்கு இல்லை .உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள் .

  • HONDA -

    தமிழ் மன்னனும்தான் பதவி ஏற்றாற் என்றுதான் நினைவு தீடீரென்று உசேன் எப்படி ஆனார்

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    இரட்டை இல்லை சின்னத்தை தானே ஒதுக்குவார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up