தமிழக நலனுக்கு முன்னுரிமை தருகிறார் மோடி: அண்ணாமலை

அவரது அறிக்கை:
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'பட்ஜெட்'டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேம்படுத்து வதற்கான மூலதன நிதி கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இது, சமீபத்திய பட்ஜெட்டில், 6,080 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம், மதுரை, சென்னை எழும்பூர், வேலுார் காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை மேம்படுத்த, 'அமிர்த பாரத்' திட்டத்தின் கீழ், 1,896 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

சென்னை சென்ட்ரல், கோவை, தஞ்சை - கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி, ஆவடி ரயில் நிலையங்களை மேம்படுத்த ஆய்வு நடக்கிறது.
எப்போதும் போல, தமிழ் மக்களின் நலன்களுக்காக முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (12)
If this is true, why no improvemnet in AIMS, mudurai?
தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்பட்ட GST, மற்றும் வரி எவ்வளவு? அதில் தமிழ் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டது எவ்வளவு? மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு அண்ணாமலை விளக்குவார?
கோயமுத்தூர் ரயில் நிலையத்தில் நிக்கும் கரி இஞ்சினுக்கு புது பெயிண்ட் அடிக்க அந்த நிதி பயன்படுத்தலாம். அவ்வளவு அக்கறை.
தமிழகம் சீரழிந்தார்க்கு காரணம் இப்படி எதிலும் ஒப்பீடு செய்து எங்களுக்கு ஒன்றுமே தரவில்லை என பேசி பேசி மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதினால்தான். மற்ற எல்லாவற்றிலும் நாங்க தான் முதல், ஆனால் நீட் பரிச்சைக்கு மட்டும் எங்களுக்கு விலக்கு வேண்டும் .இதுதான் தமிழகம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
தமிழகத்துக்கு நீங்க கொடுக்குற முன்னுரிமைதான் நல்லா தெரியுமே...? ஆண்டுக்கு ஆறாயிரம் பேர் டாக்டர் பட்டம் வாங்கிட்டிருந்தாங்க... அதை கெடுக்குற மாதிரி நீட் கொண்டு வந்து... எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இந்திக்கார பசங்கள நீட் பெயரில் நுழைச்சது... இந்திக்காரனுக்கு முன்னுரிமை...