ADVERTISEMENT
காரைக்கால்: காரைக்காலில் திருள்ளாறு-பேரளம் அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.183 கோடி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகளை முடிக்க ரயில்வேதுறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த காவிரி டெல்டா ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்ட ஒருங்கினைப்பு குழுத் தலைவரும் முன்னாள் திட்டத்துறை இணை இயக்குனர் மோகன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்திற்கு 2023--24ம் ஆண்டு பட்ஜெட்டில் காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்துார்,பேரளம் அகல ரயில் பாதைத்திட்டப் பணிகளுக்கு ரூ.183கோடி ஒதுக்கியதற்கு, மத்திய ரயில்வே அமைச்சர், தென்னகரயில்வே துறைக்கு காரைக்கால் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்கொள்கிறேன்.
இத்திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைத்து பணிகளையும் விரைவுபடுத்தி 2023ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும். மேலும் இப்பாதையை இரட்டைப்பாதையாக மேற்படுத்த வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் விரிவாக்கமாக திருநள்ளாறு ஜங்ஷனாக மேற்படுத்தி தரங்கம்பாடி, திருக்கடையூர் வழியாக மயிலாடுதுறையை இணைக்க வேண்டும். மேலும் பட்ஜெட்டில் சென்னை,மகாபலிபுரம்.புதுச்சேரி,கடலுார் திட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி காரைக்காலை நேரடியாக இணைக்கும் வகையில் முதல் கட்டமாக புதுச்சேரி, கடலுார் அகலப்பாதைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!