Load Image
Advertisement

முதல் ஹைட்ரஜன் லாரி அறிமுகம் ரிலையன்ஸ்- - லேலண்ட் கூட்டணி

சென்னை,--'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட்' ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இன்ஜின் கொண்ட கனரக லாரியை அறிமுகப்படுத்தியுள்ளன.
Latest Tamil News

இதை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இரு நிறுவனங்களும், கடந்த ஆண்டில்இருந்தே இந்த புதுமையான தொழில்நுட்பம்குறித்து ஆராய்ச்சி செய்து வந்த நிலையில்,கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இதன் சோதனை துவங்கப்பட்டது.

டீசல் இன்ஜினைப் போலவே, ஹைட்ரஜன் இன்ஜினின் கட்டமைப்பு இருப்பதால், மிகவும் குறைந்த விலையில், எளிதாக பசுமை ஆற்றலுக்கு மாற உதவி புரிகிறது.

இது குறித்து, அசோக் லேலாண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சரவணன் கூறியதாவது:
Latest Tamil News
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்வது, தொழில்நுட்ப செயல்பாடுகளில் அசோக் லேலண்ட் முன்னிலை வகிப்பதையும், பசுமை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் தருவதையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நிலையான, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தில் முன்னிலை வகிக்க இத்தகைய முயற்சிகள்உதவிகரமாக இருக்கும்.

சுயசார்பான, மாற்று எரிபொருள் வாகன பிரிவை உருவாக்குவதும், 'தற்சார்பு இந்தியா' திட்டத்தில் முன்னோடியாக திகழ்வதும் எங்களது லட்சியமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (10)

  • DVRR - Kolkata,இந்தியா

    அப்போ இங்கேயும் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி நுழைந்து விட்டாரா

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    எங்குளுக்கு ஒப்போ, ரியல்மி இதெல்லாம் என்ன வேல குடுத்தாலும் வாங்குவோம்,,,வீட்டுக்கு பேமிலி பேக் மெகா சைஸ் பெப்சி தான் வாங்குவோம்++++பாரின் சாமான் எல்லாம் அவன் சொல்ற ரேட்டுல தான் வாங்குவோம்+++ஏன்னாக்க பாரின் மொதலாளிய எங்களுக்கு யாருன்னு தெரியாது ++++டிவி,ஸ் பைக்கு மாட்டு கொள்ள வெல.++ஏன்னாக்க அது சுந்தரம் அய்யங்காருதுன்னு தெரியும்.

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    engalu

  • Ramaraj P -

    பெரியார் மண்ணில் ஒரு மின்சார வாகனம் வாங்கக் கூட வழி இல்லையா ??

    • Kalyanasundaram Linga Moorthi - Accra

      periyar mannil TASMAC available, marry the own daughter(s), may be if he would have alive may be the same shit periyar will teach the men to marry their own sister(s) also who knows. Moreover periyar mannil lot of THIRUTTU DIRAVIDA MAKKAL available

  • Gopalakrishnan S -

    அருமை ! இதெல்லாம் மௌனமோகன் சிங் ஆட்சியில் இருந்தால் கேள்விப்பட்டு இருக்கக் கூட மாட்டோம்.

    • K.Muthuraj - Sivakasi

      உண்மை தான். ஜப்பான் முதலில் அந்நிய நாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் பொழுது 51சதவீதம் பங்குகள் தங்கள் நாட்டவர்களிடம் தான் இருக்கவேண்டும் என்ற நிபந்தனைகளில் இன்று வரை எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை. ஆனால் மன்மோகன்சிங் காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up