Load Image
Advertisement

பக்காவான இரு மாடல்களை களமிறக்கிய போக்கோ!

Tamil News
ADVERTISEMENT
போக்கோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய போக்கோ எக்ஸ்5 ப்ரோ (Poco X5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.


இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் போக்கோ நிறுவனம் தனது எக்ஸ் சீரிஸில் ஏராளாமன மாடல்களை விற்பனை செய்து வருகிறது. சியாமியின் துணை நிறுவனமான போக்கோ கடந்த ஆண்டு தனது எக்ஸ் சீரிஸில் எக்ஸ்4 என்ற மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அதன் மேம்பட்ட வெர்ஷனான, போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

Latest Tamil News
போக்கோ நிறுவனம் சர்வதேச அளவில் எக்ஸ்5, எக்ஸ்5 ப்ரோ என்று இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் எக்ஸ்5 ப்ரோ மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. அதுபோக, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI14 ஒஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

Latest Tamil News
அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் , 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோக கேமராவை பொறுத்தவரை, 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

Latest Tamil News
போக்கோ எல்லோ, ஹாரிசான் புளூ மற்றும் ஆஸ்ட்ரல் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் இந்த போக்கோ X5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22,999 எனவும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் அறிமுக சலுகையாக போக்கோ எக்ஸ் 5 ப்ரோ மாடல் ரூ.20,999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 விலையில் ப்ளிப்கார்ட் தளத்தில் பெறலாம்.


வாசகர் கருத்து (1)

  • Bharathanban Vs - tirupur,இந்தியா

    சீனா கம்பெனியா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement