கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைவு
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
பெருங்குடி குப்பை கிடங்கு, 250 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 30 ஆண்டுகளாக கொட்டப்பட்ட, 35 லட்சம் கனமீட்டர் அளவுள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து, மறுசுழற்சி மற்றும் செயலாக்கம் செய்து, நிலத்தை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மத்திய, மாநில மற்றும் மாநகராட்சி நிதியில் இருந்து, 350 கோடி ரூபாய் ஒதுக்கி, 2021 அக்., மாதம் முதல் பணி நடக்கிறது.
ஒப்பந்த காலம் மூன்று ஆண்டுகள் முடிவு செய்து, 2024 மார்ச் மாதத்துடன் பணி முடித்து, நிலம் மீட்டெடுக்கப்படும். தற்போது, 57 சதவீதம் பணி முடிந்த நிலையில், 19.66 லட்சம் கனமீட்டர் அளவு குப்பை, பயோ மைனிங் முறையில் கையாளப்பட்டு உள்ளது.
இதில், 1.05 லட்சம் கிலோ எடை உடைய ஆர்.டி.எப்., எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பிரிக்கப்பட்டு, சிமென்ட் ஆலையில் நிலக்கரிக்கு மாற்று எரி பொருளாக பயன்படுத்தப்பட்டது.
இதனால், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, 7,500 ஆயிரம் கிலோ அளவு தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!