ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த திருமகன் ஈ.வெ.ரா., மறைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அ.தி.மு.க.,வேட்பாளர் தேர்வுக்கு, அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.,வில் உள்ள இரு தரப்பையும் சேர்ந்த, 2,750 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதங்களுடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் டில்லி சென்று தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்பித்தார். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு, அவைத்தலைவராக அங்கீகாரம் வழங்கியது. மேலும் வேட்புமனுக்களில் ஏ. மற்றும் பி. படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (3 + 21)
இந்தியிலேயே பதிவு செய்திருக்கலாம்
பழனிசாமி தரப்புக்கு வெற்றி நிச்சயம்.
இபிஎஸ் தரப்புக்கு ‛‛கிரீன் சிக்னல்'': ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: வந்துவிடும் இரட்டை இலை? (21)
இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க வை பிடிக்கவில்லை என்பதற்காக மட்டுமே பன்னீரை எதிர்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்போது பொது எதிரி என்ற கோணத்தில் இடைத்தேர்தலை அணுக வேண்டுமே தவிர ஈகோவுக்கு வேலையில்லை என்பதை தி.மு.க கூட்டணியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் நினைக்காததால் தி.மு.க அதன் பலனை அனுபவிக்கப்போகின்றது. மக்கள் ஆதரவு மங்கவில்லை என்று முழங்கப்போகிறது. எந்த தேர்தல் என்றாலும் இறங்கி தங்கள் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் நினைக்கவேண்டும். பா.ஜ.கவுக்கும் இது பொருந்தும். இடைத்தேர்தல் என்ற ஒன்று வரவில்லை என்றால் அரசியல் சூழ்நிலை வேறுவிதமாக மாறியிருக்கும்.
பன்னீர் தான் ஒரு அரசியல் கோமாளி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்
பிஜேபி யின் நிர்பந்தம்
ஓ பி எஸ் ஈரோட்டுக்கு வராமல் இருந்தால் மானம் காப்பாற்றப்படும்
ஒருவர் ஒரு அலுவலகத்தில் பொறுமையாக இருந்து எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து செல்ல வேண்டும் என்று எண்ணினால் அல்லது அப்படி நடந்தால் அவரை லாயக்கற்றவன் , ஏமாளி ,கோமாளி , பிழைக்கத்தெரியாதவன் , பைத்தியக்காரன் என்றெல்லாம் அவரை சுற்றியிருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். இது அனுபவபூர்வமாக பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள் அல்லது பார்த்திருப்பார்கள். அரசியல் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கப்போகிறதா என்ன ?? திரு ஓ.பி.எஸ் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல.
சுயமரியாதையை இழந்து மகனை வெற்றிபெற வைத்ததற்காக அந்த கட்சியையே அடமானம் ஆக கேட்டதற்கிணங்க இவருடைய செயல்களை வேறு கட்சி தீர்மானிக்கின்றது என்பதை சமீப நிகழ்வுகள் இவரைப்பற்றி சரியாக புரிந்து கொள்ள முடிகின்றது. பி ஜே பியை பொறுத்தவரை எப்படியாவது யாரை பிடித்தாகிலும் இம்மண்ணில் காலடி வைத்தாக வேண்டும், இதை இப்போது EPS புரிந்து கொண்டுள்ளார், விளைவு ஆக்கிரமிக்க நினைத்தவர்களை அடிமையாகும் நிலைக்கு கொண்டுவந்துள்ளார், அடிமை எப்போது வேண்டுமானாலும் காலைவாரும் என்பதை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
EPSnote the genoricity of OPS to save the symbol. He was bold enough to announce his candidate and filed the nomination. You did not have the guts to do that. He had disregarded the judgement and Avai Thalaivar before calling opinion from general council members d that Thennarasu is the candidate. He acted in partisan way. He is under the clutches of EPS.Now EPS faction does not want to hold the general council meeting. And knew he does not have majority. Now it is his turn to cooperate with OPSto win the election.
நல்ல முடிவு
இதெல்லாம் ஒரு பொழப்பா.... எப்படி இருந்த ஒரு கட்சியை, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கேவலமான கட்சியின் காலில் போட்டு சரணாகதி அடைந்துவிட்ட ரெண்டும் .... மக்கள் செல்வாக்கை இனி பெறுவது நடக்காத காரியம்...
எப்படி கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்து சொல்லிவிட்டு ஹிந்து மத விழாக்களுக்கு, வாழ்த்து சொல்லாமல் கேவலமாக நடத்தும் திருச்சபை கட்சியை விட பாஜக மேல். மக்கள் செல்வாக்கு இனிமே திருட்டு திமுகவினால் பெற முடியாது.
எடபாடியை வீழ்துவதே பிஜேபி லச்சியம்.
அன்று சசிகலாவை எதிர்த்ததால் மக்கள் ஆதரவு இருந்தது, இன்று சசிகலாவை ஆதரித்ததால் பிசுபிசுத்து போனது.
டீம்காவுக்கு எரிச்சல் தரும் செய்தி ....
நல்ல செய்தி. திரு. பன்னீர்செல்வத்திற்கு நன்றி. மிக்க பொறுப்புடன், விவேகத்துடன் கட்சியின் நன்மைக்காக நல்ல முடிவை எடுத்து இருக்கிறார்.
திமுக கையில் மாட்டிகிட்டு ஓபிஎஸ் படாத பாடு படுகிறார். பாவம் ஐயா இவரு .
பாஜக என்று சொல்ல உனக்கும் பயமா?
பொது குழுவை கூட்டினால் டங்குவாரு கிலிஞ்சிடும் என்கிற கிலி தான் காரணம்....
அந்த பருத்தி மூட்டை அங்கேயே இருந்திருக்கலாம் ..
பன்னீரின் முதல் தர்மயுத்தம் கேவலத்தில் முடிந்தது. இரண்டாவது முரண்பட்ட யுத்தம் சரண்டர் ஆனது.. இனி ஆளில்லாத கடையில் வியாபாரம் காண்பார்.
குரங்கு ( யார் என்பதே கேள்விக்குறி) ரொட்டியைப்பறித்துக்கொண்டு போய் விடலாம் என்ற அறிவு ஒரு பூனைக்காவது வந்து சண்டையை நிறுத்த ஆயத்தமாவதே பிரியா விஷயம். ரெட்டை இலை வாட இருந்த நிலையில் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது
உதவாக்கரை விடியலுக்கும் கொடுக்குக்கும் தூக்கம் அப்பீட்டு. குருமா பய யு டர்ன் அடிச்சிடுவான்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
NEVER BELIVE THIS EGOISTIC PERSON. BECAUSE OF GENEROCITY OF OPS PROBLEM SOLVED. Dont know are they real general council members.doubt very much.shanmugam and Jayakumar certainly will damage the party. They could not win in their own constituency.