ADVERTISEMENT
பாட்னா: பீஹாரில் சமீபகாலமாக பாலம், ரயில் இன்ஜின் உள்ளிட்டவைகளை திருடர்கள் திருடியதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது 2 கி.மீ அளவிற்கு ரயில் தண்டவாளங்கள் திருட்டுப்போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு சம்பவம் பலவற்றில் வித்தியாச வித்தியாசமான பாணியை கொள்ளையர்கள் கையாள்வது வழக்கம். ரயிலில் கூட பயணிப்போல நடித்து திருடுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பீஹாரில் இப்படியெல்லாமா திருடுவாங்க என யாரும் கற்பனைக்கூட செய்ய முடியாத திருட்டுகள் நடக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு, ரயில்வே இரும்பு பாலம், ரயில் இன்ஜின், செல்போன் டவர் என பலவற்றை திருட்டு கும்பல் திருடிய சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அந்த வகையில், தற்போது சுமார் 2 கி.மீ தொலைவிற்கு ரயில் தண்டவாளங்களையும் திருடி விற்றுள்ளது ஒரு கும்பல்.

பீஹாரில் உள்ள சமஸ்டிபூர் ரயில்வே கோட்டத்தில் பந்தவூல் என்ற ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து லோஹாத் என்ற சர்க்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது. இந்த சர்க்கரை ஆலை சில ஆண்டுகளாக இயங்கவில்லை. எனவே, இந்த ரயில் பாதையில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்களை ஒரு மர்ம கும்பல் திருடி விற்றுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரயில்வே நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதனையடுத்து இரு ரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (20)
ஹிந்தி இருக்கும் இடத்தில் இதெல்லாம் சகஜம்.
இந்தி படியுங்கள். இதையெல்லாம் செய்ய முடியும். அதானி நாட்டை கொள்ளையடிக்கும் போதே கண்டுக்கொள்ளாத ஒன்றிய அரசு இதை கண்டு கொள்ளுமா? உத்தரப் பிரதேசம் பிகார் எல்லாம் தன் மக்களை கூலி தொழிலாளர்களாக மாற்றி விட்டது
ரெயில்வே நிலங்கள் முறையாக பாதுகாக்கப்படாததாலும் ரிக்கார்டுகள் டிஜிட்டல் முறையில் அப்டேட் செய்யாததால் ஏகப்பட்ட என்க்ரோச்மெண்ட்... எஸ்டேட் என்று தனி அமைப்பை ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும் .
இதற்கு முன் கச்சத்தீவை அமைச்சர் பதவிக்காக வித்தாய்ங்க. நேரு லடாக்கை தாரைவார்த்த மஹான். ஊரான் ஊட்டு நெய்யே, பொண்டாட்டியின் கையே.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிஹாருக்கு வந்தே பாரத் ரயிலை உடாதீங்க. ரயிலையும், அது பிற தண்டவாளத்தையும் சேத்து ஆட்டையப் போட்டுருவாங்க.