சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான செந்தில்முருகன் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செந்தில்முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர்.
இந்த இருவரில் யாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது என்ற குழப்பம் நீடித்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் சமீபத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இபிஎஸ் தரப்பு வேட்பாளர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இரு தரப்பும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதால் தாங்கள் வாபஸ் பெறுகிறோம் எனவும் ஓபிஎஸ் தரப்பினர் விளக்கம் அளித்தனர். மேலும், இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிப்பெறுவதற்காக பிரசாரம் செய்வோம் எனவும் அறிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (21)
பன்னீர் தான் ஒரு அரசியல் கோமாளி என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்
பிஜேபி யின் நிர்பந்தம்
ஓ பி எஸ் ஈரோட்டுக்கு வராமல் இருந்தால் மானம் காப்பாற்றப்படும்
ஒருவர் ஒரு அலுவலகத்தில் பொறுமையாக இருந்து எல்லோரையும் அனுசரித்து அரவணைத்து செல்ல வேண்டும் என்று எண்ணினால் அல்லது அப்படி நடந்தால் அவரை லாயக்கற்றவன் , ஏமாளி ,கோமாளி , பிழைக்கத்தெரியாதவன் , பைத்தியக்காரன் என்றெல்லாம் அவரை சுற்றியிருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். இது அனுபவபூர்வமாக பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள் அல்லது பார்த்திருப்பார்கள். அரசியல் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கப்போகிறதா என்ன ?? திரு ஓ.பி.எஸ் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க வை பிடிக்கவில்லை என்பதற்காக மட்டுமே பன்னீரை எதிர்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. இப்போது பொது எதிரி என்ற கோணத்தில் இடைத்தேர்தலை அணுக வேண்டுமே தவிர ஈகோவுக்கு வேலையில்லை என்பதை தி.மு.க கூட்டணியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் நினைக்காததால் தி.மு.க அதன் பலனை அனுபவிக்கப்போகின்றது. மக்கள் ஆதரவு மங்கவில்லை என்று முழங்கப்போகிறது. எந்த தேர்தல் என்றாலும் இறங்கி தங்கள் கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கியை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும் நினைக்கவேண்டும். பா.ஜ.கவுக்கும் இது பொருந்தும். இடைத்தேர்தல் என்ற ஒன்று வரவில்லை என்றால் அரசியல் சூழ்நிலை வேறுவிதமாக மாறியிருக்கும்.